Sunday, August 8, 2010

நெஞ்சம் மறப்பதில்லை. பாகம் ஒன்று

சமீபத்துல தான் Five point someone புக் படிச்சேன். தன்னோட கல்லூரி வாழ்க்கைல நடந்த விஷயத்த சாதரணமா சொல்லி இருக்காரு Chetan Bhagat. படிச்சி முடிச்சப்பவே நான் முடிவு பண்ணிட்டேன். நம்மளும் இது மாதிரி ஏதாவது எழுதணும் அப்படின்னு.

எழுதணும் அப்படின்னு முடிவு பண்ண உடனே எனக்கு மனசுல தோணின சம்பவம் எங்க பசங்க சீனியர் பசங்க கூட போட்ட சண்ட தான். ஒரு மாசம் கழிச்சி இப்போ தான் டைம் கிடைச்சி இருக்கு. Fulla சொல்ல முடியாது.Part parta சொல்றேன். இதுல ஹீரோ வில்லன் எல்லாம் கெடயாது..எல்லாருமே காமெடியன் தான். அதே மாதிரி சண்ட அப்படின்னு சொன்னவுடனே எதோ figure பிரெச்சனை ragging பிரெச்சனை அப்படின்னு நெனச்சிடாதீங்க. அதெல்லாம் புனித போர். நாங்க போட்டது சப்ப மேட்டருக்கு சண்ட. சரி கதைக்கு போவோம்.

இந்த பாகம் character intro.

எங்க காலேஜ் gang ஒரு உருப்புடாத gang. எவனுமே படிக்கிற பசங்க கெடையாது. சூரஜ் தவிர. ரவுடி பசங்க....(அப்படின்னு ஒரு இமேஜ் கிரியடே பண்ணி வெச்சி இருந்தோம். But அன்னிக்குதான் எல்லாரும் எவ்வளோ பெரிய ரௌடிங்க அப்டின்னு தெரிஞ்சது. இந்த கதையோட கடைசில நீங்களும் தெரிஞ்சிக்குவீங்க.

அசோக்-என்னோட் பெஸ்ட் வொர்ஸ்ட் நண்பன். கண்ணன் காலனி பையன் அப்பிடின்னு தெரிஞ்சதும் பர்ஸ்ட் இயர்ல சீனியர்ஸ் கூட இவன rag பண்ணல. ஏரியா அந்த மாதிரி. ஒண்ணும் தெரியாத மாதிரி மூஞ்ச வச்சிகிறது இவனுக்கு கை வந்த கலை. ஆனா பெரிய கேடி. ஒரு தடவ யூனிட் டெஸ்ட்ல டெஸ்க்க்கு கீழ புக் வெச்சி காப்பி அடிக்கறதுக்காக பிளான் பண்ணி இருந்தான். சார் வந்து டெஸ்க் டெஸ்க்கா ரௌண்ட்ஸ் வந்து இவன் டெஸ்க் கீழ புக் இருக்கறத கண்டு பிடிச்சிடாரு. புகக எடுத்துகிட்டு ஸ்டாப் ரூம் போய்ட்டாரு. பையன் புயல் வேகத்துல ஸ்டாப் ரூம் போனான். சார் இவன திட்ட ஆரம்பிச்சு பத்து செகண்ட் தான் ஆயிருக்கும். அதுக்குள்ள பையன் plate a திருப்பி போட்டான். 'சார் நான் காப்பி அடிச்சத நீங்க பாத்தீங்களா? எவனோ புக் வெச்சி என்னை மாட்டி விட பாக்கறான். லேடீஸ் ஸ்டாப் முன்னாடி இப்படி பேசினீங்கனா அவங்க என்னை பத்தி எனன நெனைப்பாங்க? அனாவசியமா ஒரு அப்பாவி மேல பழி போடாதீங்க' அப்படின்னு ஒரு சீன போட்டான் பாருங்க......நானே 'ஒரு வேலை நெஜமாவே இவன் காப்பி அடிக்கல போல இருக்கே.' அப்பிடின்னு நெனச்சிட்டேன். இன்னும் கொஞ்ச நேரம் நல்ல திட்டிட்டு பேப்பர் எல்லாம் பறக்க ஸ்டாப் ரூம் விட்டு போய்ட்டான். சார் கலங்கி போய்ட்டாரு. 'நான் என்னப்பா தப்பா கேட்டுட்டேன்' அப்படின்னு அழாத குறையா ஆயிட்டாரு..கிளாஸ் ரூம் போய் பாத்தா இந்த நாய் சிரிச்சிகிட்டு இருக்கு. இவளோ சண்டைலையும் கரெக்டா சார் கொண்டு போன புகக திருப்பி சுட்டுகிட்டு வந்துட்டான்.

கார்த்தி- குட்டி Body builder, Keyboard player. singer, dancer......இவ்வளோ characters இருக்கறதுனால இவன் பெரிய ஹீரோ அப்பிடின்னு நெனச்சிடாதீங்க. சரியான காமெடி பீஸ். சுருக்கமா சொல்லனும்னா நம்ம நாய் சேகர் மாதிரி. வாய் உதார் ரொம்ப ஜாஸ்தி. 'ஒரு ஆளு கைய அரிவாளால வெட்டிட்டு ஜெயில்ல இருந்தேன்' அப்பிடின்னு ஒரு பரபரப கெளப்பி விட்டுடுவான். லைட்டா நோண்டி கேட்டா 'வெட்டல...அரிவாள் கை தவறி அவன் மேல விழுந்துடுச்சு' அப்பிடின்னு சொல்லுவான். இன்னும் நோண்டி கேட்டா 'அரிவாள் இல்ல...குச்சியால அடிச்சேன் அப்பிடின்னு நெனைக்குறேன். கோவமா இருந்தேன் இல்ல? கைல என்ன இருந்ததுன்னு ஞாபகம் இல்ல' அப்பிடின்னு லெவல் குறைசசிகிட்டே போவான். சரியான டுபாக்கூர் fellow.

Felix, prabhu பத்தி அடுத்த தடவ சொல்றேன்.
இப்போ......தொடரும்......

6 comments:

  1. Hi Machi, It’s really nice to see you still remember these things. People may forget the past when they reach peaks, but you are always the same in all the times. That’s what I like about you. The most I liked about “NENJAM MARAPATHILAI” is my intro.. THE BEST WORST FRIEND” that is hundred percent true. Because the best can never exist without the worst. Good can never exist without the bad. A day never comes without the night. Light can never exist without the darkness. there is no love without hate.Even God can never exist with out the Evil. and that is what truth is all about.. I am waiting for the next part of “NENJAM MARAPATHILAI”. Good job Pal .. keep going.. 

    ReplyDelete
  2. dei..machi jee. evanukku ennadhanda pirachanai. ippadi kadikkuran, mudiyala machi mudiyala.

    nadanthai yellam yezhutha pakka romba super ah irukku.

    waiting for more.

    dei oakum....thayavuseidhu un pooranathe niruthu.

    ReplyDelete
  3. Machi jee, Fmrocka pathi nalla eluthu, par avan commentoda first linelayea Prachanai endra varthai eruku.., avan collegela pana prachenai,kuripa antha dhandal matera vidathey.

    machi felixu, thayavusaithu ne vayala pesu..en puranathai nerutha mudiyathu. ethu oakum puranam. ethuku endaaa.. kedayathu..

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. Daae, enadapa vayasu unaku,
    kula karthi pathi ena da theriyum unaku..
    26 varusama moka comedy paniketu erunthavan da avan ,
    avanuku pinala oru kootamey eruku theriyuma,
    enaiki rathari thanduva ne,
    mavana nalaiku kalila yuiroda eruntha, ne veran da, kulla karthi area unathu eduthuko po..

    ReplyDelete
  6. machaans....en posta vida intha comments sammma comedya irukku da... Makkale...naa solla...Ashok thaan enoda worst friendslaye best worst friend....

    ReplyDelete