பாகம் ஒன்று
--------------------
திரைப்படக்கல்லூரி..
என் வாழ்க்கைல நா ஆசப்பட்ட ஒரே விஷயம். ஒரு டைரக்டர் ஆகணும்ன்றது என்னோட கனவு. கனவுகள் பத்தி எவளவோ சொல்லலாம். உதாரணத்துக்கு, 'People who dream when they are asleep are less dangerous than people who dream when they are awake. Because the latter's dream come true.' என் கனவும் பலிச்சது.
என் பேரு ****. மிடில் கிளாஸ் பாமிலி. அதிகமா பேசாதவன். 'இவன் பேசறதுக்கே காசு கேப்பான், பேசினா முத்து உதிர்ந்திடும், பேச்சுத் துணைக்கா? இவனா?' இப்படி எல்லாம் என்ன கிண்டல் பண்ணவங்க நண்பர்கள் மட்டும் இல்ல.. பெற்றோர்கள் கூட. அவங்க சொன்னது உண்மை தான். 'நிறைய பேசாதவன்.. நல்லா எழுதுறவன். நிறைய வேற்று மொழி படம் பாக்கறவன்' இப்படி டைரக்டர் ஆகறதுக்கு உண்டான தகுதிகள் எனக்கு இயற்கையாவே இருந்தது. அதுக்காக நா ஒரு introvert ன்னு சொல்லல. வாழ்க்கை அப்படி அமஞ்சிடுச்சு.
தமிழ் திரு நாட்டுல என்ன மாதிரி சினிமா வெறியோட பல கோடி மக்கள் இருக்காங்க. காம்ப்படிசன் காரணமோ, இல்ல அவங்களோட இன்ப்ளுயன்ஸ் அண்ட் சாயல் என் மனசுல பதிய கூடாதுன்னு நெனச்சேனோ, இல்ல எப்பவும் போல தனிமைய ரசிக்க ஆச பட்டேனோ.. ஏதோ ஒரு ரீசன்.. நா சென்னைல படிக்க விரும்பல. நா படிச்சது திஸ்பூர் பிலிம் இன்ஸ்டிட்யுட், அஸ்ஸாம்.
இங்க சேந்ததுல இருந்தே ப்ரோபெஸர்-ரோட தனி கவனம் என் மேல விழும் படி எல்லாம் நடந்தது. என்னோடைய ஆர்வத அடையாளம் கண்டு என்ன ஊக்க படுத்தின ஒரே ஜீவன். கிட்ட தட்ட எல்லா உரிமையும் எனக்கு காலேஜ்ல ஏற்படுத்தி குடுத்தவர். விரல் விட்டு எண்ணக்கூடிய (அதுவும் ஒரு கை மட்டுமே பயன்படுத்தி) அளவுக்கு கொஞ்சமே நண்பர்கள் இருந்த எனக்கு சனி ஞாயிரு எல்லாம் என் காலேஜ்லயே தான். அந்த டைம்ல ஒரு ஈ காக்கா கூட காலேஜ்ல இருக்காது. காலேஜ் ஹாஸ்டல் எல்லாம் கேம்ப்பஸ் வெளிய தான். சோ நேச்சுரலி மாணவர்கள் யாரும் வீக்கெண்டுல இருக்க மாட்டாங்க. ஒன்னு ரெண்டு ப்ரோபெஸர்ஸ், வாட்ச்மன், அட்டெண்டெர்ஸ், ஒரு அஞ்சு பிற மாநில மாணவர்கள். அப்படி ஒரு சனிக்கிழமைல தான் நா நிஷா-வ பாத்தேன்.
வீகெண்ட் ல அலுவலக விஷயமா இயங்கற எங்க காலேஜ் வேன்ல எப்போதும் கல்லூரி போறது என் வழக்கம். எப்பவும் காலியா போகும் அந்த வேன்ல அன்னிக்கு நா ஏறும்போது எனக்கு முன்னாடியே அவ இருந்தா. படியில நின்னுகிட்டே அவ முகத்த ரசிச்சேன். அலட்டல் இல்லாத அமைதியான அழகு. கண்ணு காது மூக்கு எல்லாம் இருக்க வேண்டிய எடத்துல அழகழகா இருந்தது. ஒரிசா, பெங்கால் மொழிகள்ல நடிகையானா கண்டிப்பா கேர்ள்-நெக்ஸ்ட்-டோர் ரோல்ஸ்க்கு செட் ஆவா. இப்படி நா அவ முகத்தோட ஒவ்வொரு பார்டயும் தனித்தனி ஃபிரேம்ல போட்டு அலசிக்கிட்டு இருக்கும்போது, திடீர்னு ஒரு ஃபிரேம்ல அந்த கண்கள் எதையோ உத்து பாத்து. இன்னொரு ஃபிரேம்ல அந்த உதடு அழகா சிரிச்சது. சிரிப்பின் காரணமா அந்த கன்னம் லைட்டா குழி போட்டது. அப்படியே ஒரு அழகு கீற்று மின்னல் மாதிரி தெறிச்சது. கொஞ்ச நேரம் கழிச்சி தான் உணர்ந்தேன் அவ என்ன பாத்து தான் சிநேக புன்னகை வீசிக்கிட்டு இருக்கான்னு. அந்த புன்னகைக்கு பதில் குடுத்தேன். அமைதியா போய் என் சீட்ல உக்காந்து வானம் பார்க்க போயிட்டேன்.
பாகம் ஒன்று
--------------------
திரைப்படக்கல்லூரி..
என் வாழ்க்கைல நா ஆசப்பட்ட ஒரே விஷயம். ஒரு டைரக்டர் ஆகணும்ன்றது என்னோட கனவு. கனவுகள் பத்தி எவளவோ சொல்லலாம். உதாரணத்துக்கு, 'People who dream when they are asleep are less dangerous than people who dream when they are awake. Because the latter's dream come true.' என் கனவும் பலிச்சது.
என் பேரு... பேர்லாம் எதுக்குங்க. மிடில் கிளாஸ் பேமிலி . அதிகமா பேசாதவன். 'இவன் பேசறதுக்கே காசு கேப்பான், பேசினா முத்து உதிர்ந்திடும், பேச்சுத் துணைக்கா? இவனா?' இப்படி எல்லாம் என்னை கிண்டல் பண்ணவங்க நண்பர்கள் மட்டும் இல்ல.. பெற்றோர்கள் கூட. அவங்க சொன்னது உண்மை தான். 'நிறைய பேசாதவன்.. நல்லா எழுதுறவன். நிறைய வேற்று மொழி படம் பாக்கறவன்' இப்படி டைரக்டர் ஆகறதுக்கு உண்டான தகுதிகள் எனக்கு இயற்கையாவே இருந்தது. அதுக்காக நா ஒரு introvert ன்னு சொல்லல. வாழ்க்கை அப்படி அமஞ்சிடுச்சு.
தமிழ் திருநாட்டுல ன்னுமாதிரி சினிமா வெறியோட பல கோடி மக்கள் இருக்காங்க. Competition காரணமோ, இல்ல அவங்களோட Influence and சாயல் என் மனசுல பதிய கூடாதுன்னு நெனச்சேனோ, இல்ல எப்பவும் போல தனிமைய ரசிக்க ஆச பட்டேனோ.. ஏதோ ஒரு ரீசன்.. நா சென்னைல படிக்க விரும்பல. நா படிச்சது திஸ்பூர் பிலிம் இன்ஸ்டிட்யுட், அஸ்ஸாம்.
இங்க சேந்ததுல இருந்தே ப்ரோபெஸர்-ரோட தனி கவனம் என் மேல விழும் படி எல்லாம் நடந்தது. என்னோடைய ஆர்வத்த அடையாளம் கண்டு என்னை ஊக்கப்படுத்தின ஒரே ஜீவன். கிட்ட தட்ட எல்லா உரிமையும் எனக்கு காலேஜ்ல ஏற்படுத்தி குடுத்தவர். விரல் விட்டு எண்ணக்கூடிய (அதுவும் ஒரு கை மட்டுமே பயன்படுத்தி) அளவுக்கு கொஞ்சமே நண்பர்கள் இருந்த எனக்கு சனி ஞாயிறு எல்லாம் என் காலேஜ்லயே தான். அந்த டைம்ல ஒரு ஈ காக்கா கூட காலேஜ்ல இருக்காது. காலேஜ் ஹாஸ்டல் எல்லாம் கேம்ப்பஸ் வெளிய தான். சோ, நேச்சுரலி மாணவர்கள் யாரும் வீக்கெண்டுல இருக்க மாட்டாங்க. ஒன்னு ரெண்டு ப்ரோபெஸர்ஸ், வாட்ச்மன், அட்டெண்டெர்ஸ், ஒரு அஞ்சு பிற மாநில மாணவர்கள். அப்படி ஒரு சனிக்கிழமைல தான் நா நிஷா-வ பாத்தேன்.
வீகெண்ட் ல அலுவலக விஷயமா இயங்கற எங்க காலேஜ் வேன்ல எப்போதும் கல்லூரி போறது என் வழக்கம். எப்பவும் காலியா போகும் அந்த வேன்ல அன்னிக்கு நா ஏறும்போது எனக்கு முன்னாடியே அவ இருந்தா. படியில நின்னுகிட்டே அவ முகத்த ரசிச்சேன். அலட்டல் இல்லாத அமைதியான அழகு. கண்ணு காது மூக்கு எல்லாம் இருக்க வேண்டிய எடத்துல அழகழகா இருந்தது. ஒரிசா, பெங்கால் மொழிகள்ல நடிகையானா கண்டிப்பா கேர்ள்-நெக்ஸ்ட்-டோர் ரோல்ஸ்க்கு செட் ஆவா. இப்படி நா அவ முகத்தோட ஒவ்வொரு பார்டயும் தனித்தனி ஃபிரேம்ல போட்டு அலசிக்கிட்டு இருக்கும்போது, திடீர்னு ஒரு ஃபிரேம்ல அந்த கண்கள் எதையோ உத்து பாத்து. இன்னொரு ஃபிரேம்ல அந்த உதடு அழகா சிரிச்சது. சிரிப்பின் காரணமா அந்த கன்னம் லைட்டா குழி போட்டது. அப்படியே ஒரு அழகு கீற்று மின்னல் மாதிரி தெறிச்சது. கொஞ்ச நேரம் கழிச்சி தான் உணர்ந்தேன் அவ என்னை பாத்து தான் சிநேக புன்னகை வீசிக்கிட்டு இருக்கான்னு. அந்த புன்னகைக்கு பதில் குடுத்தேன். அமைதியா போய் என் சீட்ல உக்காந்து வானம் பார்க்க போயிட்டேன்.
------------------------------------------
'Excuse me?'
என் scribbling pad ஓட, தனியா கல்லூரி பெஞ்ச்ல உக்காந்து ஏதோ எழுதிக்கிட்டு இருந்த அந்த பகல் நேரத்துல, திடீர்னு ஒரு குரல். திரும்பிப் பார்த்தேன் — நிஷா
"வீக்கெண்ட் டைம்ல இந்தக் கல்லூரில நிறைய பேர் இருக்க மாட்டாங்க… நான் சாப்பாடு கொண்டு வந்திருக்கேன். தனியா உக்காந்து சாப்பிட பிடிக்கல… நான் இங்க உங்க கூட உக்காந்து சாப்பிடலாமா?"
அவள் தமிழ்ல பேசுவாள்னு நான் ஒருபோதும் நினைச்சதே இல்ல. என் தனிமையை இழக்க விரும்பல.
"இல்லை… நான் சாப்பாடு கொண்டு வரல… உங்க லஞ்ச் நான் ஷேர் பண்ணனும்னு விரும்பல". என் பதில் கேட்டு அவள் சிரித்தாள்.
"பரவாயில்ல… நான் உங்களை சாப்பிட சொல்லல… நான் இங்க உங்க கூட உக்காந்து என்னோட லஞ்ச் சாப்பிடறேன்னு தான் சொன்னேன்".தவிர்க்க முடியல.
'உங்க பேர் என்ன?'
வாயில் ஏதையோ வச்சுக்கிட்டு கேட்டா. என் தனிமைக்கு பங்கம் வந்துடுச்சுனு தெரிஞ்சிடுச்சு. scribbling pad மூடி வெச்சிட்டு அவ கொண்டு வந்த ஸ்பூன்ல ஒன்ன கையில எடுத்தேன்.
'That's the spirit.' அப்படின்னு சிரிச்சிக்கிட்டே அவ லஞ்ச்ல என் பாகம் பிரிச்சா.
அதுக்குள்ள அடுத்த கேள்வி கணை தயாராகி என் மேல வீசப்பட்டது.
'நீங்க ஸ்டூடண்டா? ஏன் யாருமே இல்லாத வீக்கெண்ட்ல வந்து இருக்கீங்க?'
'இன்னும் நா என் பேரையே சொல்லல… அதுக்குள்ள அடுத்த கேள்விக்கு ஸ்டார்ட் ஆயிட்டீங்க.'
'ஹஹா… Santhosh Subramaniam படத்துல வர மாதிரி சொல்றீங்க.'
'சாரி நா தமிழ் படங்கள் பாத்து பல வருடம் ஆச்சு…'
இந்த பதில் அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் ஏதோ தெளிவு வந்தது போல சிரித்தாள். எனக்கு புரியவில்லை.
'ஏன் சிரிக்கிறீங்க?'
'இல்ல… பொதுவா என்ன பாத்ததும் எல்லாரும் என்கிட்ட பேச அலைவாங்க. நீங்க என்ன கண்டுக்கவே இல்லையே. அதான் சொன்னேன்.'
Oh. Head weight party போல இருக்கு ன்னு நினைச்சிக்கிட்டேன். நினைச்சதை வெளிப்படையா சொல்லவும் செய்தேன்.
'அழகு இருக்கற இடத்துல அகங்காரம் கூட இருக்கும் ன்னு correct ஆ தான் சொல்லி இருக்காங்க தமிழ் புலவர்கள்.'
'Mister "பேர் சொல்லாதவரே" அவசரப்பட்டு தப்பு கணக்கு போடாதீங்க. நா அப்படி mean பண்ணல. ஆனா தமிழ் நாட்டுல என்ன தெரியாதவங்க யாரும் இல்ல ன்னு mean பண்ண வந்தேன்.'
'இது over buildupa இருக்கு' என்று நா சிரிச்சேன்.
அவள் இப்போது சீரியஸாக ஆனாள்.
'I am Nisha. Leading Tamil actress. இதுவரைக்கும் 8 படம் பண்ணி இருக்கேன். கடைசியா நா ஜோடி சேந்து நடிச்சது Kamal Haasan கூட.'
என் ஸ்பூன் தவறி கீழ விழுந்தது.
பாகம் இரண்டு
-----------------------
என் திகைப்பு நீங்க ஒரு வாரம் ஆச்சு.
Weekdays ல நிஷா கல்லூரி வரல. என் கல்லூரில என்னை தவிர இரண்டு தமிழ் பசங்க இருந்தாங்க. எப்பவும் ஏதாவது தமிழ் படத்த பத்தியே பேசிக்கிட்டு இருப்பாங்க. எந்த படத்துல இருந்து எந்த சீனை சுடலாம்ன்னு discuss பண்ணிட்டே இருப்பாங்க. எனக்கு அவங்கல பிடிக்காது. என்னை ஒரு அறை கிறுக்கன் னு முடிவு பண்ணி வெச்சிருந்தாங்க. ஆனாலும் வேற வழி இல்லாம அவங்கல கேட்டேன்.
நிஷா னு ஒரு தமிழ் actress கிடையவே கிடையாதாம். எனக்கு நிஷா மேல கோவம் வரல. எவ்ளோ easyஆ என்ன நம்ப வெச்சிட்டா ன்னு அவ நடிப்பு திறமைய நினைச்சி ஆச்சர்யப்பட்டேன். மறுபடியும் அவளை பார்க்க opportunity கிடச்சா என் முதல் படத்துல அவளை நடிக்க வைக்கணும் னு நினைச்சிக்கிட்டேன்.
அந்த வீக்கெண்ட் நான் கல்லூரி வேன் ல ஏறும் போது 'மீண்டும் மீண்டும் நிஷா'.
அவ பொய் சொன்னதை குத்தி காட்டாம நேர அவகிட்ட உண்மைய சொன்னேன்.
மறுபடியும் ஒரு மந்திர புன்னகை.
'என்னோட நெஜ பேர் நிஷா. சினிமால எனக்கு வேற பேர் இருக்கு'.
என் மனம் இப்போ உண்மையிலேயே இவளை நம்பலாமா வேண்டாமா ன்னு குழம்பிடுச்சு.
அவளே தொடர்ந்துப் பேசினா.
'Anyways… உங்கிட்ட prove பண்ண வேண்டிய அவசியம் எனக்கு இல்ல. In fact, நீங்க அத தெரிஞ்சிக்காம இருக்கறதே நல்லது.'
எனக்கும் அது சரி ன்னு பட்டது.
'இப்போவாவது பேர சொல்லுங்கலேன்'. சொன்னேன்.
'நீங்க ரொம்ப straightforward-டா நேர்மையா இருக்கீங்க. எனக்கு ஒரு நல்ல friend கிடச்ச feel இப்போவே வந்து இருக்கு. ஆனா நீங்க நெஜமாவே என்ன தெரியாது ன்னு சொல்றீங்களா இல்ல பொய் சொல்றீங்களா ன்னு எனக்கு தெரியல.'
நா நிஷா மாதிரியே குரலை imitate பண்ணி,
'உங்கிட்ட prove பண்ண வேண்டிய அவசியம் எனக்கு இல்ல. In fact, நீங்க அத தெரிஞ்சிக்காம இருக்கறதே நல்லது.'
அவள் கலகலன்னு சிரிச்சிக்கிட்டு, 'நல்ல try. Not bad,'ன்னு certificate குடுத்தா.
நாட்கள் போக போக அவ சொன்னது உண்மை ன்னு எனக்கு தோணிச்சு.
வழக்கமா எல்லா heroines-உம் சொல்லுவாங்க இல்ல-'நா நடிக்க வந்ததே ஒரு விபத்து' ன்னு.
அப்படி நிஷா கதை அளக்கல. Acting was her passion and luck chose her.
Side actress, heroineஒட தோழி, heroவோட தங்கை ன்னு படி படியா முன்னேறி இப்போ heroine ஆகி இருக்கா.
Surya, Vikram, Vijay, Ajith ன்னு நிறைய heroes கூட நடிச்சிருக்கறதா சொன்னா.
எனக்கு அவங்க எல்லாம் யாருனே தெரியாது ன்னு சொன்னதை அவளால சுத்தமா நம்பவே முடியல.
'அதெப்படி தமிழ் சினிமாவே பார்க்காத ஒரு தமிழன் இருக்க முடியும்?'
'நா இருந்துட்டேன். பல வருடம் முன்னாடி வரைக்கும் பாத்துட்டு இருந்தேன். இப்போ பார்க்கணும்னு தோணல.'
'ஏன் இப்போதைய தமிழ் சினிமா ன்னா உனக்கு அவ்வளோ எளக்காரமா?'
'அப்படி இல்ல நிஷா. என்னோட course முடிஞ்சதும் நா நுழைய போறதே தமிழ் சினிமால தான். But என்னோட கதை கருவ வேற எந்த படமும் influence பண்ண கூடாதுன்றதுல நா ரொம்ப கவனமா இருக்கேன். ஏதாவது ஒரு நல்ல scene பாத்துட்டு அத என் படத்துல வைக்கணும்னு எனக்கு ஆசை வந்துட கூடாது. ரொம்ப புதுசா படம் பண்ணணும் ன்னு நினைக்குறேன். Plus நான் films பற்றி படிக்க தான் foreign movies பார்க்கறேன்.'
'ஏதோ ஒன்னு… நீ பார்க்காம போனது எனக்கு நல்லதா போச்சு. இல்லனா நீயும் எல்லார மாதிரி என்கிட்ட distance maintain பண்ணி இருப்ப.
Public figureஆ இருக்கறதோட வலி and இழப்பு பற்றி நிஷா சொன்னப்போ எனக்கே கொஞ்சம் கஷ்டமாதான் இருந்தது. So அவ ஏன் சென்னையில படிக்காம weekly flight ஏறி இங்க வந்து special classes attend பண்ணி படிக்கறா ன்னு எனக்கு புரிஞ்சது.
'ஆனா ஏற்கனவே film industryல இருக்குறவ எதுக்கு film instituteல படிக்க ஆசைப்பட்ற?'
'உன் மர மண்டைக்குப் புரியற மாதிரி simpleஆ சொல்றேன். பாட தெரிஞ்சவங்க நிறைய பேர் இருக்காங்க. நீயும் சும்மா போய் பாடினா கூட்டத்தோட காணாம போயிடுவ… அதான் முறையா சங்கீதம் கத்துக்கற மாதிரி நடிக்க கத்துக்க நினைக்குறேன். எங்க அப்பாவே இவ்வளோ question கேக்கல. நீ ரொம்ப கேக்கற டா.
இப்படியே எங்க நட்பு 'வாங்க போங்க'ல இருந்து 'வா போ' வா மாறி 'வாடா போடா' வரைக்கும் develop ஆச்சு.
என்னோட script எல்லாம் படிச்சு correct பண்ணுவா. என் கதையின் முதல் ரசிகை ஆனா.
In fact, என்னோட first படத்துல அவ தான் heroineஆ நடிப்பேன் ன்னு அடம் பிடிச்சா.
நான் அப்பப்போ அவளோட classல help பண்ணுவேன்.
Professor எனக்கு ஒரு scene குடுத்து, நிஷாவோட சென்று நடிச்சு காட்ட சொல்வாரு.
கவனமா காதல் காட்சிகளை தவிர்த்து வந்தேன். என் மேல எனக்கு இருந்த நம்பிக்கை போயிடுச்சு.
எங்க 'I love you' சொல்லிடுவேனோ ன்னு ஒரு பயம்.
ஒரு நாள் நாங்க தனியா உக்காந்து ஆளுக்கொரு book படிச்சிக்கிட்டு இருந்தப்போ அவ என் கிட்ட love scene சொல்லி தராதத பற்றி கேட்டுட்டா. வழக்கம் போல straightforward-டா சொன்னேன்.
She turned from her book once and laughed.
'நீ நல்லவன்னு எனக்கு தெரியும். ஆனா இவ்ளோ நல்லவன்னு எனக்கு தெரியாதுடா'
சொல்லிட்டு அவ பாட்டுக்கு book-ஐ படிக்க போயிட்டா.
Bookக்கு அந்த பக்கம் அவ வெட்க புன்னகை தரணும், தன்னோட blush-அ மறைக்க book-ஐ use பண்ணிக்கிட்டன்னும் எனக்கு அப்போ தெரியாது
'Nisha…'
'hmm'
'Nisha..'
'hmm..?'
'ஒன்னும் இல்ல..' இன்னொரு நாள் சொல்லிக்கலாம் ன்னு விட்டுட்டேன்.
அவ சிரிச்சா. எப்பவும் என்ன மயக்கும் அந்த அழகு.
'நீ என்ன சொல்ல வந்தன்னு எனக்கு தெரியும். I love you தானே?'
தெரிஞ்சிக்கிட்டே கேக்கறாளே. இந்த பொண்ணுங்க எல்லாம் இப்படித்தான்.
'இல்ல.. தமிழ்நாட்டுல வெங்காயம் ஒரு கிலோ என்ன விலைன்னு கேக்கலாம் ன்னு கூப்பிட்டேன்'.
'சரி டா.. என்கிட்ட உனக்கு சொல்றதுக்கு ஒன்னும் இல்ல. ஆனா எனக்கு அந்த மரத்துக்கிட்ட சொல்லறது கொஞ்சம் matter இருக்கு. நா போய் அதுக்கிட்ட பேசிட்டு வரேன்' அவ எழுந்து போயிட்டா.
ஒரு நல்ல opportunity miss பண்ணிட்டோமோ ன்னு எனக்கு தோனிச்சு. சரி கொஞ்ச நாள் பொறுக்கலாம் ன்னு முடிவு பண்ணேன்.
'Oii..' Nisha அழைத்தாள்.
'என்ன?'
'உங்கிட்ட நா சொல்ல வேண்டியத இந்த மரத்துக்கிட்ட சொல்லி இருக்கேன். அதுக்கிட்ட நீயே கேட்டுக்கோ' ன்னு சொல்லிட்டு அவ class போயிட்டா.
மரத்துக்கிட்ட போய் பாத்தேன். 'I love you' was carved in it
Part - III
---------
College course முடியும் தருணம்.
'அவசியம் நீ போய்தான் ஆகணுமா?'
College vanல வீடு திரும்பும் போது என் தோளில் சாஞ்சி என் விரலில் கை கோத்துக்கிட்டே Nisha கேட்டா.
'நீ நாலு தடவ இப்படிே கேட்டினா நா போக மாட்டேன். நீயே decide பண்ணி சொல்லு Nisha. International film festival க்கு invitation கிடச்சிருக்கு. போனா நிறைய exposure கிடைக்கும். ஆனா இனிமே நாம ரெண்டு பேரும் சென்னையில தான் meet பண்ண முடியும். அங்க இந்த மாதிரி உன்னை பார்க்க முடியாதுன்னு நினைச்சாலும் கஷ்டமா இருக்கு. So நீயே சொல்லு. நா என்ன செய்யட்டும்'
'எனக்கும் நீ போனா உன் careerக்கு நல்லதுன்னு தோணுது… ஆனா உன்னை போக சொல்ல முடியல… so நீயே சொல்லு..'
ரொம்ப நேரம் யோசிச்சு 'சரி நா போயிட்டு two weeksல வந்துட்றேன். Ok வா?'
'சரி..'
அவ வாய் சொன்னதே தவிர மனசு சொல்லல.
சரின்னு சொல்லும் போது அவ கண்ணுல கண்ணீர் form ஆகிட்டு இருந்தது.
என் கைய பிடிச்சிட்டு இருந்த அவ கை இறுக்கம் கொஞ்சம் அதிகம் ஆனது.
என் மனச மாத்திக்கிட்டேன்.
'யோசிச்சு பாத்தா… அவங்க host பண்ணற எல்லா movies-உம் நா பாத்துட்டேன். So விடு… நா இங்கயே இருக்கேன்'.
உடனே அவ மனசு மாறிடுச்சு.
'இல்ல டா. நீ போயிட்டு வா. Two weeks தானே. டக்குனு போயிடும். நாம சென்னையில meet பண்ணுவோம்'
இப்போ என் கண்ணுல கண்ணீர்.
காதல் வந்தாலே இந்த பிரச்சனை தான்.
But I wanted to end the drama.
So I said ok to her idea and wanted to change the topic.
'Nisha…'
'hmm..'
'நீ பெரிய actressன்னு சொல்ற. இது வரைக்கும் உன் படம் எதுவும் நா பார்க்க கூடாதன்னு சொல்லிட்ட. Suppose நாளைக்கு நா சென்னை வந்து Nisha என்னை love பண்ணுறான்னு சொன்னா யார் நம்புவா?'
'correct தான்.. இந்த அழுக்கு பையன எந்த பொண்ணுதான் love பண்ணுவா ?'
'நக்கலா… கொன்னுடுவேன்.'
'ஆனா seriousஆ டா. நீ சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க.. நானே சொன்னா தான் உண்டு.'
'சொல்லுவியா?'
'சந்தேகப்படுறியா?'
'இல்ல'
'ஏன்?'
'ஏன்னா நீ என் நண்பன்'
ரெண்டு பேரும் வாய் விட்டு சிரிச்சோம்.
மறுபடியும் கனத்த மௌனம்
நா கேட்ட கேள்வி அவள பாதிச்சிருக்கணும்.திடீர்னு நிமிர்ந்து ஒகாந்து என்ன பாத்தா.
தன்னோட கையில இருந்த ring-அ கழற்றி எடுத்தா.
**'Do you, **, take this woman as your lovely wedded wife?'
எனக்கு ஒரு நிமிஷம் தூக்கி வாரி போட்டது.
'Nisha.. யோசிச்சித்தான் பண்றியா? விளையாட்டுக்குனாலும் its almost like getting married'
'தெரிஞ்சித்தான் சொல்றேன். Will you marry me?'
'கண்டிப்பா.. but அதுக்கு என்ன அவசரம் இப்போ?'
'அவசரம் தான். இப்போ நீ சொல்லப் போறியா இல்ல…'
அவள் சொல்லி முடிக்கறத்துக்குள்ள அவள் மோதிரம் என் கைக்கு ஏறிடுச்சு. என் கை விரலில் இருந்த என்னோட ring அவ கைக்கு மாறிடுச்சு.
Part - IV
---------
Nisha சொன்ன மாதிரி ரெண்டு வாரம் ஓடினதே தெரியல.
Chennai வந்து இறங்கினேன். எப்பவும் இல்லாம எனக்கு சென்னை காற்றே வித்தியாசமா இருந்தது.
நா love பண்ணுற பொண்ணு இங்க தான் எங்கயோ இருக்கான்னு நினைக்கும்போது சந்தோஷமா இருந்தது.
வந்த நாளே Nishaவ பார்க்க கிளம்பினேன்.
தனியா போனா வழி தேடி போகணும்ன்னு என் friend Ashok கூட bikeல போனேன்.
போகும் போது அவன் கிட்ட நடந்ததை எல்லாம் சொன்னேன்
'யாரு மச்சி Nisha? உண்மையான பேர கேட்டு வெச்சி இருக்கலாம் இல்ல?.. அய்யயோ ஆர்வம் தாங்கலையே.. கிசுகிசு எழுத நல்ல matter'
'மூடிக்கிட்டு சீக்கிரம் போ. இன்னிக்கு தெரிஞ்சிக்கத்தானே போற.'
'ஆனாலும் உன் மூஞ்சிக்கெல்லாம் ஒரு heroine மடுங்குவா ன்னு என்னால நம்பவே முடியல டா'
'இன்னியில இருந்து நம்புவ…
Kodambakkam நெருங்கும் போது ஏதோ ஒரு marriage hall-இல் கூட்டம்.
Ashok சொன்னான்.
'பாரு... ஒரு heroine வாழ்க்கையை நீ love பண்ணி முடிக்கப் போற. ஒரு heroine வாழ்க்கை விதி முடிச்சிடுச்சு'
'என்ன டா சொல்ற? என்ன கூட்டம் அங்க?'
'ஒன்னும் இல்ல மச்சி. Trisha இருக்காங்க இல்ல. சே... உனக்கு தான் யாரையும் தெரியாதே. Ajith, Vijayன்னு சொன்னாலே யாருன்னு கேப்ப. Trishaன்னு ஒரு actress மச்சி. Two weeks முன்னாடி flight accidentல இறந்துட்டாங்க. அவங்க use பண்ண பொருள் எல்லாம் இந்த hallல expoக்கு வெச்சிருக்காங்க'
எனக்கு ஒரு நிமிஷம் மூச்சு நின்னுடுச்சு.
'Flight accidentஆ? Two weeks முன்னாடியா? எங்க இருந்து வந்தாங்கன்னு தெரியுமா?'
'அதெல்லாம் தெரில டா. Full news படிக்கல'
'Ashok.. ஒரு நிமிஷம் அந்த expo போய்ப் பாத்துட்டு போயிடலாம். உள்ள போ
Bike உள்ள கொண்டு போய் stand போட்டு நிறுத்தும் போது Ashok கேட்டான்
'மச்சி.. நீ Trisha தான் Nisha ன்னு நினைக்குறியா?'
'ஆமா டா. கொஞ்சம் பயமா இருக்கு'
அவன் seriousஆ கேக்கறான்னு நினைச்சி நா பதில் சொன்னேன்.
ஆனா அவன் kubeerன்னு சிரிச்சான்.
'டேய்.. உன்னை ஒரு heroine love பண்ணுச்சுன்னு சொன்னதே என்னால நம்ப முடியல. இதுல Trisha love பண்ணாங்கன்னு சொன்னா நாங்க நம்பிடுவோமா. எங்கயோ news வாங்கி படிச்சு Trisha செத்துட்டாங்கன்னு தெரிஞ்சிக்கிட்டு இப்படி ஒரு story ready பண்ணி இருக்க… ஏன்டா உனக்கு இந்த விளம்பரம்?'
எனக்கு ஆத்திரம் பொத்துக்கிட்டு வந்தது. ஓங்கி அறையலாம்னு தோணிச்சு.
ஆனா அவன் சொல்றது உண்மை தான். யாரும் நம்ப மாட்டாங்க.
Nishaவே சொன்னாத்தான் உண்டு.
'தோ பாரு. உங்கிட்ட பேசறதுக்கு எனக்கு time இல்ல. என் கூட படிச்ச ரெண்டு தமிழ் பசங்கள்ல ஒருத்தன் உன் friend தானே. அவன் கிட்ட phone பண்ணி கேளு. நா உள்ள போய் பாத்துட்டு வரேன்.'
'சரிடா கோபப்படாத. நா நம்பணும்னு கேக்கல. நா நம்பினாலும் மத்தவங்க எல்லாம் நம்பணும்னு இல்ல?'
Nisha ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி சொன்னது என் காதுல ஒலிச்சது.
அதையே என் வாய் சொன்னது.
'உங்கிட்ட prove பண்ண வேண்டிய அவசியம் எனக்கு இல்ல. In fact, நீங்க அத தெரிஞ்சிக்காம இருக்கறதே நல்லது'
Ashok என்ன உண்மையான அக்கறையோட பாத்தான்.
'சரி டா. நா அவன் கிட்ட call பண்ணி பேசிட்டு இருக்கேன். நீ சீக்கிரம் போய் பாத்துட்டு வா'
நா உள்ள ஓடினேன்.ஏனோ தொண்டைக்குழியில சோகம் அழுத்திச்சு.
கண்ணீர் already ready ஆகிட்டு இருந்தது.
Expoல வெச்சிருந்த exhibitsல எதுவும் Nisha தான் Trisha ன்னு confirm பண்ண உதவல. Photo வெச்சிருந்த இடத்துல ஒரே கூட்டம். கிட்ட நெருங்க முடியல. எல்லாரும் அங்க candle ஏத்திக்கிட்டு இருக்காங்கன்னு தெரிஞ்சது.
நா காலியா இருந்த exhibits எல்லாம் பார்க்கலாம் ன்னு திரும்பும் போது ஒரு nanosecond என் கண்ணுல ஒரு flash அடிச்ச மாதிரி இருந்தது. மெதுவா திரும்பி பாத்தேன்.
Exhibit number 17ல
Trisha கடைசியாக போட்டிருந்த ornamentsன்னு சொல்லி வெச்சிருந்த இடத்துல ஒளி வீசிக்கிட்டு இருந்தது என்னோட Ring.
Part - V
---------
சில நாட்களுக்குப் பிறகு.....
எனக்கு எதிர்க்க உக்காந்துக்கிட்டு இருந்தவரைப் பாத்தேன். சின்ன வயசுதான்.
ஏதோ படிச்சிக்கிட்டு இருந்தாரு. அவரோட தொழில அவர்தான் ரொம்ப famousஆம். கூட்டிட்டு வந்த Ashok சொன்னான். Name plate தமிழில் எழுதப்பட்டு இருந்தது. 'Dr. Vinoth. மன நல மருத்துவர்'.
'Reports எல்லாம் பார்க்கறப்போ இவர்கள் normalஆ தான் இருக்காரு. இவருக்கு ஒரு பிரச்சனையும் இல்லையே. இங்க எதுக்கு கூட்டிட்டு வந்தீங்க..'
Ashok பதில் சொன்னான்.
'இல்ல doctor.. இவனுக்கு மன நிலை சரி இல்லையோன்னு...'
'இல்ல Mr. Ashok. He is perfectly alright. Why do you think so?'
'Doctor... இவன் Trishaவ love பண்ணத்தான் சொல்றான்'
'அது எல்லாரும் பண்ணறதுதானேப்பா. நான்கூட தான் Trisha, Asin, Geneliaவ எல்லாம் love பன்னுறேன். அவங்க என்ன love பண்ணணுமே'
'அதான் doctor இவனும் சொல்றான். Trisha இவன love பண்ணாங்கலாம்ன்னு.'
Dr. Vinoth கடகடவென்ன சிரிச்சாரு.
'அப்போ கண்டிப்பா இவர்கள் பைத்தியம் தான்'
சிவந்துபோன என் கண்கள் மெள்ள அவரைப் பாத்தது.
'Why is it so hard to believe that a girl loved me? என் Nisha பெரிய actressஆ இருக்கலாம். ஆனா அவளும் பொண்ணுதானே'
**'Ok. Ok. Relax . Trisha உங்களை love பண்ணாங்கன்றதுக்கு என்ன ஆதாரம்?'
'Already நா Ashok கிட்ட சொல்லிட்டேன் doctor. I am tired. அவனையே கேளுங்க'
Ashok ஏதோ கஷ்டத்துல நெளிந்தான்.
'மச்சி.. நீ வெளியே wait பண்ணுடா. நா doctor கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்'.
நா சந்தோஷமா கிளம்பினேன்.
'நானே வெளிய போகணும்ன்னு நினைச்சேன். எனக்கு ஏன் இங்க வந்தோம் ன்னு இருக்கு. நா bike கிட்ட wait பண்ண்றேன். நீ பேசிட்டு வா.'
'சொல்லுங்க Mr. Ashok. உங்க friend சொல்றது உண்மையா?'
'Doctor. இத அவன் இருக்கும்போது சொல்றதா வேண்டாமன்னு தான் தயங்கி அவனை வெளிய போக சொன்னேன். அவனுக்கு உண்மையிலேயே பைத்தியம் தான் doctor'
'Mr. Ashok. உங்களுக்கு தெரிஞ்சத எங்கிட்ட சொல்லுங்க. அவர் பைத்தியமா இல்லையா ன்னு நா சொல்றேன்'
'Doctor. என்னோட friend ஒருத்தன் இவன் கூட தான் Assamல படிச்சான். அவன் கிட்ட இவன் சொன்னத பத்தி கேட்டேன்... இவன் எப்பவும் யார் கூடவும் கலக்காம தனியாவே இருப்பானாம். College தவிர வேற எங்கயும் போக மாட்டானாம். அடிக்கடி college வெளிய உக்காந்துக்கிட்டு தனியா பேசிக்கிட்டு இருப்பானாம். யாரோ 'I love you' ன்னு carve பண்ண tree கிட்ட நின்னுகிட்டு யார்கூடவோ இருக்கற மாதிரி பேசிட்டு இருப்பான்னு சொல்றான். College van driver கூட சொல்றாராம். இவன் எப்பவும் தனியா பேசிக்கிட்டு சிரிச்சிக்கிட்டு வருவான்னு. இவன் characterஆ firstலேயே தெரிஞ்சி வெச்சிக்கிட்டுத்தான் இவன் professor இவன அவரோட special கவனிப்புல வெச்சி இருந்துருக்கார். Script எல்லாம் எழுதி நடிக்க சொல்றப்போ அவன் எழுதிய எல்லாம் characterஆவும் அவனே நடிப்பானாம். Trishaவோட மோதிரத்த காமிச்சு 'அது என்னோடது.. என் விரல்ல நா போட்டுருக்கறது Trishaவோடதுன்னு சொல்றான்'. இவன் சொல்றத நம்பவும் முடியல நம்பாம இருக்கவும் முடியல. அவனுக்கு இருக்கற ஒரே friend நாந்தான் doctor. மத்தபடி எப்பவும் தனியாதான் இருப்பான். யாரோட companyயும் விரும்ப மாட்டான். அப்படி இருக்கும்போது இவனே போய் ஒரு பொண்ணு கிட்ட பேசி இருப்பான்னு என்னால நம்ப முடியல. அதான் doctor இங்க கூட்டிட்டு வந்தேன்'
'ஹ்ம்ம்ம்ம்... regular case தான். அவங்களோட தனிமைய போக்கிக்க அவங்களாவே imagination characters வளர்த்து அவங்கள்கூட பேசறது. நீங்க worry பண்ணிக்காதீங்க. ஒரு 10 sittings கூட்டிட்டு வாங்க. நா பாத்துக்கறேன்.'
Ashok வெளிய வந்தான். நா bike மேல சாஞ்சிக்கிட்டு என் மோதிரத்த சுத்தி சுத்தி பாத்துக்கிட்டு இருந்தேன்.
Ashok ஒரு கணம் யோசிச்சு என் கிட்ட வந்தான்.
'ஒன்னும் இல்ல டா. Doctor கடைசில ஒத்துக்கிட்டாரு. உங்கிட்ட பேசணுமாம். நீயே அவர்கிட்ட போய் நீ சொல்றது எல்லாம் நிஜம்ன்னு சொல்லிடு'
நா நிமிர்ந்து பாத்தேன்.
'உங்கிட்ட prove பண்ண வேண்டிய அவசியம் எனக்கு இல்ல. In fact, நீங்க அத தெரிஞ்சிக்காம இருக்கறதே நல்லது'
முற்றும்.