Wednesday, September 20, 2023

நேர்கோணல்


வாசலில் பேப்பர் படித்துக் கொண்டிருந்த கணேசன் கேட் அருகே சத்தம் கேட்க நிமிர்ந்துப்  பார்த்தார். சந்தானம் வந்திருந்தான்.

'குட்மார்னிங்  அங்கிள்...'  

‘வாப்பா சந்தானம். நல்லா இருக்கியா? பாத்து ரொம்ப நாள் ஆச்சு’.

‘என்ன அங்கிள், நேத்து தான கார்த்தி கூட நைட் ஷோ பாத்துட்டு வீட்டுக்கு வரும்போது பாத்தீங்க?’

‘அடிக்கடி வரியே ன்றத தான் அப்படி சொன்னேன்’

‘ஐயோ அங்கிள்... செம்ம கலாய் .. செம்ம கலாய்’

‘என்னடா  நெத்தில பட்ட? நீட்டா டிரஸ் பண்ணிக்கிட்டு? லேகியம் விக்க போறியா?’

 ‘போங்க அங்கிள். என்ன ரொம்ப புகழாதீங்க.’ சட்டை காலரை தூக்கிக் கொண்டான்.

கணேசன் தலையில் அடித்துக்கொண்டார்.

‘கஷ்டம்டா... சரி எங்க பொறபுட்டுட?’

‘இன்டர்வியூ க்கு அங்கிள். வேலைக்கு போகலாம் ன்னு முடிவு பண்ணிட்டேன். அதான் கார்த்தி ய  கூட்டிட்டு போகலாம் ன்னு ’ என்று இழுத்தான்.

‘அவன் இந்த மாதிரி நல்ல விஷயத்துக்கு எல்லாம் வரமாட்டானே ப்பா’

‘அய்யோ அங்கிள். அவன் தான் நேத்து படம் முடிச்சி வரும்போது என்கிட்ட இந்த வாக்-இன் இன்டர்வியூ பத்தி சொன்னான். 'காலைல வாடா. என் பைக்லயே போலாம்' ன்னான்’

‘என்னடா அதிசயம்? இந்த வாரம் வந்த எல்லா படமும் பாத்துடீங்களோ?’

‘அதோ கார்த்தி யே வரானே. டேய். என்னடா பார்மல் டிரஸ் போடாம ஜீன்ஸ் ல வர?’

‘உன்ன டிராப் பண்ண இந்த டிரஸ் போதும் வாடா’

‘என்னது நீ அட்டென்ட் பண்ணலையா?’

‘இன்டர்வியூ அட்டென்ட் பண்றேன்னு நா சொன்னேனா? ட்ராப் பண்றேன்னு தான் சொன்னேன். இஷ்டம் இருந்தா வா. கஷ்டம் இருந்தா பஸ் புடிச்சி போ.’

‘சரி...சரி.. என்ன ட்ராப் பண்ணி எனக்கு வேல வாங்கி குடுத்தேன்னு வெளிய சொல்லிக்கணும். அதான.. வந்து தொல’

‘போய்ட்டு வர்றேன் ப்பா’.. கார்த்தி பைக்கில் அமர்ந்தான்.

‘டேய் கார்த்தி . சந்தானம் கூட போறேன்னு ஆய்டுச்சு. அப்டியே நீயும் அட்டென்ட் பண்ணலாம்ல? வேல கெடைக்கறது எல்லாம் கஷ்டம் டா. உத்தியோகம் புருஷ லட்சணம். நாங்க எல்லாம் அந்த காலத்துல...’

‘ப்பா.... நீங்க பேசிட்டே இருங்க.. தோ போய்ட்டு வந்துட்றேன்’

‘சரி நீ போ. சந்தானம், நா சொல்றது சரி தானே? வேலை தான் ஒருத்தனுக்கு...’

‘அய்யோ அங்கிள். நானும் தானே அவன் கூட போகணும்.’

‘ஆமால்ல. அப்புறம் யார் கிட்ட என்ன பேசிட்டு இருக்க சொன்னான்?’

‘நீங்க தனியா பேசிட்டே இருங்க.. நாங்க ரெண்டு பேரும் மோனைக்கு போய் ஆம்புலன்ஸ் அனுப்புறோம்.நேரா கீழ்ப்பாக்கதுல எறக்கிடுவாங்க.’

‘போங்கடா.. பாத்து போங்க.’

No comments:

Post a Comment