Saturday, November 26, 2016

இருளின் நிழல் - நிழல் 4

எவ்வளவு யோசித்தும் குழப்பாகவே இருந்தது ராஜேஷ்க்கு. கிரீடிங் கார்டு ஆனந்த் தன் காதலிக்கு எடுத்து சென்றது. அதில் தன் ஆபீஸ் அட்ரஸ் இருக்க என்ன காரணம்? அதுவும் இல்லாத 13th ப்ளோர்க்கு ஏன் போக சொல்கிறது? திரும்பவும் ஞாபகபடுத்தி பார்த்தான். சந்தேகமே இல்லாமல் அதே வார்த்தைகள். "Go to 13th floor". ஒருவித பயம் வந்து தொற்றிக் கொண்டது. யாரிடமும் இதை பற்றி சொல்லவில்லை.

அடுத்த வாரம் போலிஸ் அழைத்தால் போலீஸ் ஸ்டேஷன் சென்றான் ராஜேஷ். அப்பாவின் நண்பர் டாக்டர் அங்கிள் கூட வந்தார். போலீஸ் ஆனந்தின் உடலை தீவிரமாக தேடிவருவதாக கூறினார்கள். இன்னமும் ராஜேஷை சந்தேக கண்ணோடே பார்த்தார்கள்.  டாக்டர் போலீசிடம் நீல நெருப்பை பற்றி தனக்கு தெரிந்தவற்றை கூறினார். போலீஸ் நம்பவில்லை. ராஜேஷ்க்கு புரிந்தது. யார் தான் நம்புவார்கள்? டாக்டர் பேசி விட்டு வரட்டும் என்று ஸ்டேஷன் விட்டு வெளியே வந்து நின்றான். 'ஹலோ' என்று ஒரு பெண் குரல் கேட்டது. 'ஐ ஆம் சஞ்சனா. ஆனந்தோடலவ்வர்.' என்று அறிமுக படுத்திக்கொண்டாள். 

Tuesday, October 25, 2016

கவி-மம்

காலையிலேயே முடிவெடுத்தேன்
கவிதை எழுதிவிடுவது என்று

காலம் காலமாக காத்திருக்கிறது
காகிதமும் என் பேனாவும்

எதைப்பற்றி எழுத?

கூதலும் குளிர்க்காலப்பறவையும்
என்றெல்லாம் எழுத
இலக்கியம் தெரியாது எனக்கு

காதலியை பற்றி எழுதலாம்.
கட்டியவள் கோபிப்பாள்.
குட்டியாக சண்டை வரும்.

காதலை பற்றியாவது எழுதலாம்.
நான் செய்ததெல்லாம்
காதலா என்றே தெரியாது.

கவிதை எழுதும்
நண்பர்களை கேட்கலாம்.
கடலை போடும்
நண்பர்கள் மட்டுமே அறிமுகம்

க, கா வென்று ஆரம்பித்து   
கண்ட இடத்தில் வரியை மடக்கினால்
கவிதை என்றாகி விடுமோ?

உத்வேகத்துக்காக
ஜன்னலின் வெளியே
உற்றுப் பார்த்தேன்
'நான் தான் கிடைத்தேனா?' என
சற்றே முறைத்தது அணில்

கடிகார மணி சத்தம்!
கவிதை தரவில்லை
கடமையை உணர்த்தியது

கவிதை எழுதும்
காலமெல்லாம் கடந்து விட்டேனோ?

களைத்தது மனம்.

கள்ளிக்காட்டு இதிகாசமா
எழுத கேட்டேன்? குறைந்தது
வெள்ளை ஜிப்பா-வேனும்
இருக்க வேண்டும் போல

காகிதத்தை கசக்கினேன்
எறிய மனமில்லை
கவிதை கிடைக்கும்வரை இந்த

கருமத்தை படியுங்கள் 

Tuesday, May 10, 2016

வலைப்பக்கத்தின் பயணம் - ஒரு எளிய அறிமுகம்

நாம கம்ப்யூட்டர்ல இன்டர்நெட் எக்ஸ்ப்லோறேர்-லையோ கூகிள் க்ரோம்-லையோ  www.google.com ன்னு  தேடும்போது நிலத்துக்கு அடியில (அதான், undergroundல) என்ன நடக்குது?  புரியற மாதிரி குட்டி கற்பனை.

கூகிள் ஒரு கடை ன்னு வெச்சிக்கோங்க. அதான் SERVER  நீங்க CLIENT உங்களுக்கு அந்த கடைல இருந்து சாமான் வாங்கணும். உங்க பையன் BROWSER கிட்ட சொல்றீங்க. (ஏன் டவுசெர் ன்னு  பேர் வைக்க வேண்டியது தானே ன்னு கேக்க கூடாது) 


1) 'டேய் BROWSER, கொஞ்சம் இந்த கடைக்கு போய்ட்டு வாடா' ன்னு WWW .GOOGLE.COM ங்கற கடை பேர (URL) சொல்றீங்க


உங்க பையனுக்கு கடை பேர் சொன்னால்லாம் தெரியாது.  அட்ரஸ் தெரிஞ்சா தான் போவான்.


3)  மொதல்ல பையன் ' ஏற்கனவே இந்த கடைக்கு போய் இருக்கோமா? நமக்கு ஆல்ரெடி இந்த URL லோட அட்ரெஸ் தெரியுமா' ன்னு மனசு(BROWSER CACHE)க்குள்ள யோசிப்பான். 'ஏற்கனவே போய் இருக்கான். அட்ரஸ் தெரியும்' ன்னா கெளம்ப ரெடியாயிடுவான். தெரியலயா? எதிர்த்த வீட்டுக்கு போய்  DNS அக்கா கிட்ட கேப்பான். 


4) DNS அக்காவுக்கு ஊர்ல உள்ள எல்லா கடை அட்ரஸும் அத்துபடி. அவங்க URL ல பாத்துட்டு 'இந்தா டா அட்ரஸு, பாத்து போய்ட்டு வா' ன்னு  . 139.130.4.5 ங்கற  மாதிரி அட்ரஸ் (IP ADDRESS)  குடுப்பாங்க.


5) பையன் உங்க கிட்ட 'அப்பா அட்ரஸ் தெரிஞ்சிடுச்சு. என்ன வாங்கணும் ன்னு லிஸ்ட் குடுங்க' ன்னு கேக்கறான்.  நீங்க HTTP REQUEST ங்கற  லிஸ்ட்  குடுக்குறீங்க. 


லிஸ்ட்ல a) நீங்க யாரு, உங்க பையன் ப்ரௌசெர் யாரு அப்டிங்கற METADATA,   b) நீங்க என்ன மொழி (PREFERRED LANGUAGE) ல பேசுவீங்க,  c) போன தடவ கூகிள் அண்ணாச்சி ஜாமா குடுத்தப்ப 'அடுத்த தரம் வரும்போது இந்த இன்பர்மேஷனையும் சேத்து குடுங்க, ஒத்தாசையா இருக்கும் (உதாரணம்: கிரெடிட் கார்டு நம்பர், பாஸ்வேர்ட்) ' ன்னு விட்டுட்டு போன COOKIES (ங்க கம்ப்யூட்டர் ல ஒரு FILE  தான்)  எல்லாம் இருக்கும்


6) இந்த HTTP REQUEST-அ எடுத்துகிட்டுBROWSER கெளம்புவான்.  (TCP CONNECTIONதான் ரோடு. அத ஓபன் பண்ணுவான். நேரா IP address க்கு போவான்.


நீங்க சாமான் வாங்கறதால இந்த request  பேரு "HTTP/GET" request. நீங்க சாமான் (போடோஸ் மாதிரி) குடுத்து அனுப்பிச்சா "HTTP/POST" request


7) கூகிள் அண்ணாச்சி உங்க லிஸ்ட  வாங்குவாரு.. நீங்க அனுப்பிச்ச METADATA , COOKIES எல்லாம் பாப்பாரு. கடைல செக்யூரிட்டி ஜாஸ்தியா இருந்தா 'நீ யாரு, பாஸ்வேர்ட் என்னனு எல்லாம் பாப்பாரு'... பாத்துட்டு 'அட நம்ப சுப்பிரமணி பையனா நீ? மொதல்லையே சொல்ல கூடாதாப்பா?'  ன்னு request  அ  வாங்கி வச்சிக்கிட்டு response  ங்கற சாமான ரெடி பண்ண ஆரம்பிப்பார். 


Response  ல என்ன இருக்கும்ன்னா a)  'தங்கள் கடிதம் கிடைத்தது'ன்ற மாதிரி ஒரு ஸ்டேடஸ் கோட் (200 ன்னா எல்லாம் ஓகே ன்னு அர்த்தம். 404 ன்னா நீங்க கேட்டது இல்ல ன்னு அர்த்தம்), b) நீங்க கேட்ட  HTML BODY 


8) உங்க பையன் இதெல்லாம் எடுத்துகிட்டு திரும்ப TCP CONNECTION ரோட்ல வந்து வீடு சேருவான். வீடு வந்ததும் ரோட க்ளோஸ் பண்ணிடுவான் இல்ல அடுத்து யாரவது போரங்கன்னா தெறந்தே விட்டுடுவான். 


9) வீட்டுக்கு (உங்க கம்ப்யூட்டர்)  வந்ததும் சாமான எல்லாம் ஒழுங்கா எடுத்து வைக்கணுமில்ல. வந்த சாமான் HTML ஆ? போட்டோ வா? பாட்டா? ன்னு தெரிஞ்சிக்கிட்டு அதுக்கேத்த மாதிரி எடுத்து வைப்பான்.  HTML  ஆ இருந்தா அத அழகழகா கலர் கலரா காட்றதுக்கு css file , javascript file  எல்லாம் யூஸ் ஆகும். சில சமயம், இந்த file  எல்லாம் வேற கடைல இருக்கும். மறுபடியும் உங்க பையன் கடைக்கு கெளம்பி போக வேண்டி இருக்கும். 


10) கடைசில நீங்க வந்த பொருள உங்க திரைல பாப்பீங்க. 


இது தாங்க நடக்குது... மேலோட்டமா சொல்லி இருக்கேன். 


இப்போ உங்க பையன் கிட்ட அண்ணாச்சி request  வாங்கினதும், அவர் கடைல இருக்க IIS ங்கற குமாஸ்த்தா என்னன்ன பண்றார் ன்னு இன்னும் விலாவரியா பாக்கலாம். 


அருஞ்சொற்பொருள் 

URL - Uniform Resource Locator (http://www.webopedia.com/TERM/U/URL.html) 
DNS  - Domain Name Servers (http://www.networksolutions.com/support/what-is-a-domain-name-server-dns-and-how-does-it-work/)
TCP - Transmission Control Protocol (http://www.webopedia.com/TERM/T/TCP.html)
HTTP - HyperText Transfer Protocol (http://www.webopedia.com/TERM/H/HTTP.html) 
HTML - HyperText Markup Language 

Sunday, February 14, 2016

இருளின் நிழல் - நிழல் 3

டாக்டரின்  சைக்கியாற்றிஸ்ட் நண்பரைப் பார்க்க அவரது வரவேற்பறையில் காத்திருந்தார்கள் ராஜேஷும் டாக்டரும். மாடி ஏறி வந்ததில் மூச்சிரைத்தது ராஜேஷ்க்கு. அப்பா வயதை ஒத்திருந்தாலும் ஆரோக்கியமாக இருப்பத்தின் அடையாளமாக சீரான மூச்சு டாக்டர் க்கு. 

"டாக்டர் ஒரு ஹெல்ப்" ராஜேஷ் பேசினான். 
"சொல்லுப்பா"
"உங்க ப்ரெண்ட் கிட்ட நடந்தது இந்த கொலை, கேஸ், நா சஸ்பெக்ட் ன்னு எந்த விஷயமும் தெரிய வேண்டாமே" 
"இல்ல ராஜேஷ். ஆஸ் எ டாக்டர் சொல்றேன். எல்லாத்தையும் சொல்றது தான் நல்லது. அவர் யார் கிட்டயும் எதுவும் சொல்ல மாட்டார். என்ன நம்பு."
ராஜேஷ் மெளனமாக தலை அசைத்தான். 

சைக்கியாற்றிஸ்ட் வரவேற்பறைக்கே வந்து டாக்டரின் கைக்குலுக்கினார். டாக்டர் ராஜேஷை அரைகுறையாய் அறிமுகபடுத்தி விஷயம் சொல்லி உதவி கேட்டார். ராஜேஷை மட்டும் உள்ளே அழைத்து சென்றார் சைக்கியாற்றிஸ்ட் நண்பர். 

'ஒண்ணும் பயப்படாதீங்க ராஜேஷ். இது பெரிய ப்ரோசீஜர் இல்ல. ஒரு விதமான டெக்னிக் அவளோ தான். ஹிப்னோடிசம் மாதிரி' சைக்கியாற்றிஸ்ட்  தைரியம் சொன்னார்.
அவர் காட்டிய சோபாவில் படுத்தான் ராஜேஷ். 'ராஜேஷ்..இப்ப நம்ம பண்ணபோறது  பேரு Velvety-Smooth Breathing. நிதானமான மூச்சு. அது மேல மட்டும் தான் கவனம் இருக்கனும். ப்ரீத் இன் அண்ட் ப்ரீத் அவுட். பத்து நிமிஷம் பண்ண போறோம். அப்பறம்  உங்களோட இன்சிடெண்ட நடந்தது நடந்தபடி அப்படியே சொல்லுங்க. நீங்க பார்த்தவங்க மட்டும் இல்லாம அவங்க நிறம், சுத்தி இருந்த திங்க்ஸ், அங்க இருந்த டெம்பெரேச்சர், வாசனை எல்லாத்தையும் ஞாபகத்துக்கு கொண்டு வாங்க. எதாவது மறந்தாலும் தயங்காம மனசுல முதல்ல தோன்றத சொல்லுங்க.'

ராஜேஷ் முயற்சித்தான். ஒன்றுவிடாமல் வரிசையாக அன்று நடந்ததை சொன்னான். தேவை படும்போது சைக்கியாற்றிஸ்ட்  மேலும் மேலும் கேள்வி கேட்டு அவன் ஞாபகத்தை தூண்டினார். அவரது யுக்தி வேலை செய்தது. மேலும் மேலும் நுணுக்கமாக கேள்வி கேட்டார். ராஜேஷை யோசிக்க விடாமல் பேச வைத்தார். இறுதியாக ராஜேஷின் மனதில் இருப்பது தங்குதடையில்லாமல் வெளியே வந்தது. இது தான் சரியான நேரம் என்று சைக்கியாற்றிஸ்ட் கடைசி கேள்வியை கேட்டார். "அந்த கிரீடிங் கார்டில் என்ன தெரிந்தது?" கேட்டவுடன் பதில் வந்தது ராஜேஷிடமிருந்து.

சைக்கியாற்றிஸ்டிடம் விடை பெற்று கிளம்பினார்கள் ராஜேஷும் டாக்டரும்.

"என்ன ராஜேஷ். கேள்விக்கு பதில் கெடச்சிதா?" டாக்டர் கேட்டார் 
"ஹும்."
"வெரி  குட். என்னன்னு சொல்லலாமா என்கிட்ட?"
"Go to 13th floor... இது தான் டாக்டர் நா அந்த கிரீடிங் கார்டில பாத்தது."
"தட்ஸ் எ குட் லீட். உன் ஆபீஸ்ல 13th  ப்ளோர் போய் விசாரி. எதாவது தெரியுதா ன்னு பாப்போம்."
ராஜேஷ் மௌனமாய் இருந்தான்.
" என்ன ராஜேஷ். சம்திங் ராங்?"
"எங்க ஆபீஸ் ல 12 floors தான் டாக்டர். 13th ப்ளோரே இல்ல."