இன்போசிஸ் சேந்து ரெண்டு வாரம் இருக்கும். கம்பெனி பஸ்சில என்கூட வர்ற ஒரு அண்ணா என்ன கூப்பிட்டார்.'நீ தான் கடைசி ஸ்டாப்ல இருந்து வர்ற. நான் ஆன்சய்ட் போறேன். நீ ரூட் சாம்பியனா இருக்கியா?' என்று கேட்டார்.
'ரூட் சாம்பியன்னா என்னண்ணே?'
'ஒண்ணும் இல்லடா. ட்ரான்ஸ்போர்ட் கமிட்டி ஏதாவது சொல்லனும்னா உங்கிட்ட சொல்லுவாங்க. நீ பஸ்ல வரவங்களுக்கு சொல்லணும். பஸ்ல வர்றவங்களுக்கு எதாவது பிரெச்சனைனா உங்கிட்ட சொல்லுவாங்க. நீ பஸ் டிரைவர் கிட்ட சொல்லணும். சரியா?'
எனக்கு ஒண்ணும் புரியல. ஒத்துகிட்டேன்.
'சூப்பர்டா. இப்போ போய் டிரைவர் அண்ணா கிட்ட என் சீட் கிட்ட இருக்க fanஅ போட சொல்லு?'
'நானா? எப்பிடிண்ணே?'
'இனி எல்லாம் அப்படி தான். அப்டியே அடுத்த ஸ்டாப்ல என் ப்ரெண்ட் வர கொஞ்சம் லேட் ஆகும். ஸ்டாப்ல டூ மினிட்ஸ் வெயிட் பண்ண சொல்லு'
'இல்லண்ணே. நா போய்?'
'இனி எல்லாம் அப்படி தான்.'
டிங்டிங்க்டிங்க்டிங்.. நாயகன் ஆனேன்.
அடுத்த நாள் டிரைவர் அண்ணன் கிட்ட சொன்னேன். இந்த மாதிரி என்ன ரூட் சாம்பியன் ஆக்கிட்டாங்கன்னு. 'ரொம்ப சந்தோசம் சார். கம்பெனி சேர்ந்த ரெண்டு வாரத்துலேயே உங்களுக்கு இவளோ பெரிய பதவி கேடச்சிடுச்சே ' ன்னு கலாய்க்கற மாதிரியே பாராட்டினார்.
என்ன இருந்தாலும் ஒரு வேலைன்னு வந்துடுச்சே. இனிமே ரெண்டாவது சீட்ல தான் ஒக்காரணும்னு முடிவு பண்ணேன். பஸ்ல வர்ற எல்லாருக்கும் என்ன பத்தியும் என் போன் நம்பரும் குடுத்து ஈமெயில் அனுப்பினேன். நாள் ஆக ஆக பதவிப்பலன் கெடைக்க ஆரம்பிச்சுது.
பர்ஸ்ட் ஸ்டாப் ன்றதால டிரைவர் கூட பேச நேரம் கெடைச்சது. சொந்த வாழ்க்கை, ரோட்டில் குறுக்க வந்தவர்கள், முந்தா நாள் பஸ்ல வந்தவர்கள் பத்தி எல்லாம் பேசுவோம். கிளீனர் பையனும் லைட்டா பழகிட்டான். என்ன பார்த்தா சிரிப்பான். நா வர லேட் ஆச்சுனா எனக்காக வெயிட் பண்ணுவாங்க. எங்க எப்ப பாத்தாலும் ஒரு வணக்கம் வைப்பாங்க. நா ஆன்சைட் போயிட்டு வந்தப்போ அவங்களுக்கு சாக்லேட் ஏதோ கிப்ட் எல்லாம் வாங்கிட்டு வந்தேன்.
இதுல நல்லதும் இருக்கு. கேட்டதும் இருக்கு. புது நண்பர்கள் கெடைச்சாங்க. அவங்களுக்காக பஸ்ஸ வெயிட் பண்ணி சொல்லி நடந்த பிரச்சனைகளும் இருக்கு. பஸ் டெய்லி சீக்கிரம் ஆபீஸ் போய் சேரணும்ன்னு ரூட்ட மாத்தி 'ஓவர் ஆர்வகோளாறு' ன்னு பேர் வாங்கின கதையும் இருக்கு. நிறைய சொல்லணும்.ஆனா எனக்கு புடிச்ச ஒரு கதை மட்டும் சொல்றேன்.
ஒரு தடவ நானும், என்னோட மனேஜரும் சாயந்தரம் பேசிக்கிட்டே பஸ்க்கு நடந்து போனோம். வழக்கமா பஸ்ல ஏறும் போது எல்லாரையும் ஐடி கார்டு கேப்பாங்க. என்ன தெரியும்ன்றதால கேக்க மாட்டாங்க. அன்னிக்கு எங்க பஸ்ல ஐடி கார்டு செக் பண்ணது பக்கத்து பஸ் பையன். என் பஸ் டிரைவர் அண்ட் கிளீனர் கொஞ்சம் தூரத்துல நின்னு பேசிட்டு இருந்தாங்க. மனேஜர் பஸ் ஏறப்போனப்போ அந்த பக்கத்து பஸ் பையன் 'சார் ஐடி கார்டு?'ன்னு கேட்டான். என் மனேஜர் கஷ்டப்பட்டு தேடிக் கண்டுப்புடிச்சி ஐடி கார்டு எடுத்து காமிச்சார். அடுத்து அவன் என்கிட்ட 'சார் ஐடி கார்டு?'ன்னு கேட்டான். நான் என் பர்ஸ் எடுக்க பின்னாடி கை கொண்டு போனேன். அதுக்குள்ள தூரத்துல இருந்த எங்க பஸ் கிளீனர் ஓடி வந்து, 'டேய் யார் கிட்ட ஐடி கார்டு கேக்கற? நீங்க போங்க சார்' அப்டின்னு என்ன அனுப்பினான். பாஷா லெவல் பீலிங் எனக்கு. என் மனேஜர் இன்னைக்கும் இதை சொல்லி சிரிப்பார்..

😂 Avan koorukka mattum neenga poidaatheenga sir
ReplyDeleteROFL
Delete