நேத்து தான் படம் பாத்தேன்... ரொம்ப நாள் கழிச்சி (கில்லி க்கு அப்பறம்) ஒரு நல்ல விஜய் படம். . ஆல் தேங்க்ஸ் டு முருகதாஸ். வழக்கமா வர விஜய் பட சாயல் தெரியாம எடுக்க நெனச்சேன் ன்னு சொல்லி இருக்கார். அதனால தான் படம் நல்ல இருந்தது. முக்கியமா தமிழ் நாட்டு சினிமா ரசிகர்கள் எல்லாம் இப்போ புத்திசாலிகள் ஆய்டாங்க, இன்டளிஜெண்டா படம் பண்ணா ரசிப்பாங்க ன்னு நம்பி படம் எடுத்தார் பாருங்க. சும்மா வெட்டியா பஞ்ச் டயலாக் பேசிக்கிட்டு ஹீரோயின் கூட குத்து ஆட்டம் போட்டுக்கிட்டு வில்லன தூக்கி போட்டு மிதிச்சா போதும் மக்கள் ரசிப்பாங்கன்னு நெனைக்காதீங்க டைரக்டர்ஸ்... அதெல்லாம் அலுத்து போய்டுச்சு. விஜய் சார் உங்களுக்கும் தான் அது. உங்க பாஷைல சொல்லனும்னா நீங்க வில்லு படத்துக்கு ஒரு கமெண்ட் சொன்னீங்களே 'என்னோட மத்த படங்கள்ல சில விஷயங்கள் தேவையில்லாம இருக்கும். அந்த மாதிரி இந்த படத்துல எதுவும் இல்ல' அது இந்த படத்துக்கு தான் பொருந்தும்.
இந்த படம் பாத்தும் விஜய் சார் இண்டர்வியு எல்லாம் பாத்தும் அவர் மேல எனக்கு மரியாதை வந்து இருக்கு. காதல் காட்சிகள் ல க்யூட்டா, மோதல் காட்சிகள் ல பாஸ்ட்டா கலக்கி இருக்கார். இந்த ட்ராக்கையே பாலோ பண்ணுங்க சார். ரஜினி மாதிரி எல்லாம் ஆக வேணாம். அவர் வழி தனி வழி....நீங்க அதுல போகாதீங்க. பஞ்ச் டயலாக் இல்லாம இருந்தா தான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு.. அவரோட ரசிகர்களும் இத உணரனும் (படம் முடிஞ்சு வெளிய வரும்போது 'படம் நல்லா தான் இருக்கு...ஆனா பஞ்சு டயலாக்ஸ் வெச்சி இருக்கலாம்' அப்படின்னு ஒரு விஜய் ரசிகர் கமெண்ட் பண்ணார். அவரே திருந்தினாலும் இவனுங்க விட மாட்டாங்க போல இருக்கு).
வில்லன் ரொம்ப அழகா இருக்கார். விஜயகாந்த் படத்துல வர மாதிரி ரொம்ப முக்கி முக்கி தமிழ் பேச விடாம ஹீரோ-வ ஹிந்தி பேச விட்டு இருக்காங்க...குட் அட்டெம்ப்ட். அதுவும் கடைசி ஹிந்தி டயலாக் டெலிவரி பிரமாதம்.
சத்யன் காட்ல மழை.. கம்ப்ளீட் காமெடி ட்ராக் இல்லாம ஹீரோ கூட ஒட்டின மாதிரியே காமெடி பண்ற side kick வேணும்னா இவர கூப்பிடுறாங்க. பெரிசா ஒண்ணும் இவர் காமெடி பண்ணலனாலும் கொஞ்சம் லைட்டா உதவி இருக்கார். பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா ன்னு இவர் கேக்கும்போது தியேட்டர்ல சிரிப்பொலி கேக்கறது, மக்கள் இன்னும் தலைவர் கௌண்டமணிய மிஸ் பண்ணறாங்கன்னு நல்லா காட்டுது.
அடுத்து காஜல். ஆரம்ப காட்சிகள்ல லைட்டா ரசிக்க வைக்கறார். அதுக்கப்பறம் 'வந்துட்டா டா' அப்படின்னு நொந்து போகற அளவுக்கு தேவை இல்லாத சீன்ஸ். அம்மணி இந்த படத்துக்காக கிக் பாக்ஸ்சிங் பயிற்சி எல்லாம் எடுத்துகிட்டாங்க ன்னு சொன்னாங்க.. ஒண்ணும் தெரியல.
படத்தோட பிளாட் ல சில ஓட்டைகள் இருந்தாலும் அவங்கவங்க தங்களோட ஓட்டைகள மூடிகிட்டு படம் பாக்கலாம்.. ரொம்ப நோண்டினா படமே எடுக்க முடியாது. என்னை கேட்டா இன்னும் கூட விறுவிறுப்பை கூட்டி இருக்கலாம். Departed படத்துல ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் பிடிக்க ட்ரை பண்ணி இருப்பாங்க இல்ல...அந்த மாதிரி... இங்கிலீஷ் படங்கள்ல இருந்து தாராளமா காப்பி அடிங்க..எங்களுக்கு தேவை நல்ல படங்கள்..
படத்தோட பெரிய தலைவலி பாடல்கள் தான். யப்பா ஹாரிஸ்... ப்ளீஸ்.. இன்னும் கொஞ்சம் நல்லா உழைங்க. ஒரு காலத்துல யு வேர் கிரேட் ஜஸ்ட் நெக்ஸ்ட் டு ரஹ்மான். இப்போ குட்டி சுவரா போய்டீங்க... முருகதாஸ் விஜய்க்கு பாலோ பண்ண அதே டெக்னிக் தான் உங்களுக்கும் - இது வரைக்கும் நீங்க போட்ட பாடல்கள் மாதிரி இதுவும் வந்துட கூடாதுன்னு கொஞ்சம் மெனகெடுங்க. சிங்கர்ஸ மாத்துங்க...ஒரே செட் தான் வெச்சி இருக்கீங்க அவங்களையும் ஒரே மாதிரி தான் பாட விடுறீங்க. முக்கியமா alaikka மாதிரி தமிழ் இல்லாத வார்த்தைல தான் பாட்டு ஆரம்பிப்பேன் ன்னு உங்க அம்மா-க்கு பண்ணிய சத்தியத்த மறந்துடுங்க.... இரிடேடிங்.
அதே மாதிரி பாடல்கள் எடுபடாம போனதுக்கு இன்னொரு காரணம் டான்ஸ். விஜய் மாதிரி ஒரு நல்ல டான்சர் கிட்ட இன்னும் நல்லா வேலை வாங்கி இருக்கலாம். VJ on the floor ன்னு பாட்டுல வரும் போதெல்லாம் நான் ரொம்ப எதிர்பாத்தேன். புஸ்ஸுன்னு ஆய்டுச்சு.
படம் நடுவுல ரெண்டு கமெண்ட் வந்தது.. கூகிள் கூகிள் பாட்டு வரும்போது 'இந்த பாடலை பாடியவர் உங்கள் விஜய்' ன்னு போடலையா?'. அப்பறம் கிளைமாக்ஸ் ல 'இவர் கை கால உடைக்கவே முடியாது போல இருக்கு. கில்லி ல இருந்து ட்ரை பண்றாங்க'... இன்றைய தமிழ் சினிமாக்கள்க்கு அபூர்வமா கெடைக்கற ஒன்னு நடந்தது... படம் முடிஞ்சதும் எல்லாரும் கை தட்டி பாராட்டினாங்க. மே பீ அந்த மிலிடரி பாட்டு போட்டதுக்கு இருக்கலாம்.
படத்துல எனக்கு சில்லரிச்ச இடம் விஜய் சொல்லும் ஒரு கதை 'ஆர்மில புதுகோட்டை பையன் ஒருத்தன் அந்த நாட்டு ராணுவத்துக்கிட்ட மாட்டிகிட்டான். ஏழு நாள் அவன சித்தரவதை பண்ணினாங்க. பீர் பாட்டில்-ல அடி வழியா முழுசா உள்ள விட்டு அப்பறமா ஒடச்சி இருக்காங்க. பத்தாவது நாள் அவன் பாடிய ஊருக்கு கொண்டு போனோம். அம்மா அப்பா சொந்தகாரங்க எல்லாம் துடிச்சி போய்ட்டாங்க .. பதினாலாவது நாள்......அவன் தம்பி வந்துட்டான்டா மிலிட்டரிக்கு' இந்த மாதிரி உண்மையா நடந்து இருக்கும்ன்னு சந்தேகமே இல்ல. அப்படி பட்ட ராணுவ வீரர்களுக்கு ஒரு பிக் சல்யூட்.
விஜய் சார், மென்மேலும் வளருக.
பின் குறிப்பு இல்ல இது என் குறிப்பு :
விஜய், அஜித் மற்றும் மற்ற ஹீரோ ரசிகர்களுக்கும் என்னோட ஒரு வேண்டுகோள். எல்லா படங்களையும் பாருங்க..எல்லா ஹீரோக்களையும் உங்களுக்கு ஏதோ ஒரு விஷயத்துக்காக பிடிக்கும். உங்களுக்கு ஒரு ஹீரோவ ரொம்ப பிடிக்கும்ன்றதுக்காக மத்தவங்க இழிவு படுத்தாதீங்க.
முக்கியமா அஜித் விஜய் ரசிகர்கள்... பேஸ்புக் ல 'i hate vijay ', 'vijay the superstar ' மாதிரி சில பக்கங்கள் பார்த்தேன்.. எவ்வளவு கீழ்த்தரமான வார்த்தைகள். அந்த பக்கத்து அட்மின் கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு பதினொரு மணி நேரம் அந்த பக்கதுல போட்டோஷாப் ல எடிட் பண்ண போட்டோஸ்அப்லோட் பண்றதும், கமெண்ட்ஸ் ல வசை மாறி பொழியறதும், போன் நம்பர் குடுத்து 'நீ ஒரு அப்பனுக்கு பொறந்துதிருந்தா எனக்கு கால் பண்ணி விஜய் பத்தி பேசுடா' ன்னு போடறதும், 'அஜித் இல்ல அவன்அஜக்கு. அவனுக்கு எப்படி கொழந்த பொறந்து இருக்கும் தெரியுமா'ன்னு கொச்சையா பேசறதுமா பொழுதை கழிச்சி இருக்கார். ரொம்பவும் வேதனைக்குரிய விஷயம். உங்களோட ஹீரோக்களுக்கே அது பிடிக்காது. அவங்களே ஒற்றுமையா இருக்கும் போது உங்களுக்குள்ள ஏன் இந்த துவேஷம்? ஒரு நாளைக்கு உங்க பதினோரு மணி நேரத்த இப்படி வீணா விரோதத்த வளர்க்க கழிககுறீங்களே. உங்களுக்கே இது சரின்னு படுதா?
நா ரொம்ப நல்லவன், இப்படியெல்லாம் நா பண்ணது இல்ல ன்னு சொல்ல வரல. நா அஜித் ரசிகன். பல தடவ அஜித் விஜய் பத்தி நண்பர்களோட விவாதம் பண்ணி இருக்கேன். ஆனா இப்படி ஒரு குரோதம், ஒரு வெறுப்பு இருந்தது கெடையாது. இப்போ யோசிக்கும்போது நா அவ்வளவு தூரம் கூட ஆர்கியு பண்ணி இருக்க தேவை இல்ல ன்னு தோணுது.
சோ, படங்கள ரசிங்க. நல்ல படத்த பாராட்டுங்க. நல்லா இல்லாத படத்துல இருக்கற நல்ல விஷயங்கள ஊக்கப்படுத்துங்க. பேஸ்புக் போன்ற ஊடகம் மூலமா நம்மளால ஒரு படத்த பிளாப் ஆக்கவும் முடியும் ஹிட் ஆக்கவும் முடியும். தமிழ் சினிமா வ தலை நிமிர்த்த வேண்டிய கடமை நடிகர்களுக்கு மட்டும் இல்ல. அத விட அதிகமா ரசிகர்களுக்கு தான் இருக்கு. உங்க ஹீரோக்களுக்கு ரசிகர்களா இருங்க. வெறியர்களா இருக்காதீங்க.
Good
ReplyDeleteHmmm.....so argument lam kalaaika mattum dhan nu ipo puriyudhu....
ReplyDelete