Monday, December 20, 2010

கண் திறப்பான்... (அதாங்க Eye Opener)

நேற்று நான் வலைத்தளத்தில் தவழ்ந்து கொண்டு இருந்த பொழுது இந்த பழமொழியின் மேல் தடுமாறி விழுந்தேன்.

"ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன பிள்ளை தானே வளரும்".

அதெப்படி ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் நம் பிள்ளை வளரும்? Logic இல்லையே...So, is the converse theory is also true, then? 'நம் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் ஊரார் பிள்ளை வளருமா’? இல்லை ஒரு வேலை ஊட்டியில் இருப்பவர்கள் பெருமையை சொல்லும் பழமொழியா? (ஐயோ அடிக்காதீங்க... இனிமே மொக்க போட மாட்டேன்)

பழமொழியின் விளக்கம் விரும்பி வலைத்தளத்தில் நுழைந்தேன். கண்டேன் meaning-ஐ...

இந்த பழமொழி என்னை போன்ற அப்பாவாக போகிற ஆண்களுக்காக சொல்லப்பட்டது . புரியலையா?

கர்ப்பத்தில் இருக்கும் குழந்தை நன்றாக வளர வேண்டும் என்றால், கர்ப்பம் தரித்து இருக்கும் மனைவியை சத்தான உணவு வகைகள் தந்து நன்றாக பார்த்து கொள்ள வேண்டும் . அப்படி உங்கள் மனைவியை (ஊரார் பிள்ளை - இன்னொருவரின் மகள்), நீங்கள் நன்றாக கவனித்து வளர்த்தால், அவள் வயிற்றில் இருக்கும் உங்கள் பிள்ளை (தன் பிள்ளை- உங்கள் குழந்தை), தானாக வளரும்.

"ஆஹா...அருமையான வரி ..அழகான பொருள் ...என் ஐயப்பாட்டை தீர்த்து வைக்கும்ஆழமான கருத்து..." அப்படின்னு நெனைகறவங்க என் bank account க்கு பொற்காசு அனுப்புங்க ...அவளோ எல்லாம் பண்ண முடியாதுனா comments section ல உங்க கருத்துகளை பகிர்ந்துகோங்க.

இதை தேடும்போது நான் வலையில் கண்டெடுத்த இதர தூசி துரும்புகள்.
1) Poet என்பதற்கு தமிழில் புலவன் என்று சொல்கிறார்கள். பொருள்?

புலவன் என்பவன் தன் மனதை புலந்து (plough in english. ஏர் பூட்டி மாடு ஒட்டி செய்வாங்களே ...அது ) உள்ளிருந்து வரும் கருத்துகளை கூறுபவன் என்று பொருள்.

Super இல்ல?

2) களவும் கற்று மற. Hope everyone knows already that this is a misconception.
களவும் கற்று மற - (களவை கூட கற்றுக்கொண்டு மறந்து விடு) என்பது தவறு .
களவு அகற்று மற - (களவு செய்யாதே ...அதை பற்றிய என்னத்தை கூட மறந்து விடு ) என்பதே புலவர் சொல்ல விழைந்தது .

'இது எனக்கு ஏற்கனவே தெரியுமே ' அப்படின்னு சொல்றவங்க இந்த 'களவு அகற்று மற ' வரி எதுல வருதுன்னு எனக்கு சொல்லுங்க ப்ளீஸ்.

முக்கியமா இன்னொரு ஹெல்ப். தெரியலனா எனக்கு தல வெடிச்சிடும். சொல்றவங்களுக்கு நெஜமாவே பொற்காசு தரலாம். Matter இது தான். எனக்கு ஒரு பாட்டு ஞாபகம் வந்தது. பொருள் என்னன்னா:
'எதை எதையோ அமுதம் என்று சொல்கிறார்கள். அதை விட ஒரு குழந்தை, சிறு கிண்ணத்தில் இருக்கும் சோற்றை குறுகுறுவென நடந்து சிறு கை நீட்டி தொட்டு, இரைத்து, முகத்தில் பூசி உண்ணும் சோறே அமுதம் போன்றது'.

One of the line in the poem will be like 'kurukuru nadanthu, sirukkai neeti, ittum, thottum,'

ஆனா எவ்வளோ தேடியும் இந்த பாட்ட என்னால கண்டு பிடிக்க முடியல. இது நமக்கு 8th, 9th ல தமிழ் subjectla வந்து இருக்கு. யாராவது கண்டு பிடிச்சி சொல்லுங்களேன்.

-- டியர்! ஜாப் எவன்ஸ்

9 comments:

  1. purananooru seyyul 188
    http://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF

    ReplyDelete
  2. படைப்புப் பல படைத்துப் பலரோடு உண்ணும்
    உடைப்பெருஞ் செல்வராயினும் இடைப்படக்
    குறுகுறு நடந்து சிறு கை நீட்டி
    இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்
    நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்
    மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
    பயக்குறை இல்லைத் தாம்வாழும் நாளே !
    - (புறநானுறு 188 )

    Thanks to cumincoriandercardamom alias Viswadhara.

    ReplyDelete
  3. Also Viswa corrected me with kalavum katru mara.

    It is 'Kalavum Kathum ara' meaning Thirudu, poi solluthal irundum irukka koodathu endru porulaam. It is either aathichoodi or just a tamil proverb.

    Thanks Viswa. Mannarin ayyathai theertha unaku 1000 porkaasugal tharanum pola than irukku. aana mannare inga kandhu vattiku Moped otraaraam. Pulavarukku bullet kekudho?

    ReplyDelete
  4. Viswadhara the Tamil Poet.. Jee u hav to treat her...

    ReplyDelete
  5. Please tell me where are these lines from (kuru kuru nadanthu..) I am also searching. Nice writing. I want to read more of your writings. Thanks.

    ReplyDelete
  6. படைப்புப்பல படைத்துப் பலரோடு உண்ணும்
    உடைப்பெருஞ் செல்வர் ஆயினும், இடைப்படக்
    குறுகுறு நடந்து, சிறுகை நீட்டி,
    இட்டும், தொட்டும், கவ்வியும், துழந்தும்
    நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும், 5
    மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
    பயக்குறை இல்லைத் - தாம் வாழும் நாளே.

    ReplyDelete
  7. குறுகுறு-- short baby steps...The poet, a king who does not have a child is longing for a baby that will raise its small hands for food..and eat by smearing the food and touching it all over ..rice and ghee on its body... What is the use (payan) in this life even if I have all the wealth (selvam).. The song has been rendered in classical format by Bharathi Selvam (see youtube)

    ReplyDelete