Friday, September 10, 2010

நெஞ்சம் மறப்பதில்லை - பாகம் நான்கு

காலேஜ் மெஸ். எப்போவும் ஒரே சத்தமா இருக்கும். நண்பர்கள். அரட்டை. இடம் பிடிக்க சண்டை. தாவி குதித்து ஹீரோயிசம் காட்டுவது. நமக்கு பிடிக்காத காய்கறிகளை மத்தவன் தட்டுல கொட்டுவது. இன்னிக்காவது பெரிய பீஸ் சிக்கன் கிடைக்குமா என்று வழி மேல் விழி வைத்து காத்து இருப்பது. ஒரே கலகலப்பா இருக்கும்.

நாங்க (அசோக், நான், சூரஜ், ஆபிரகாம்) ஒரு எடத்துல செட்டில் ஆனோம். வழக்கமான எடம் பிடிச்சோம். வழக்கம் போல அரட்டை அடிச்சோம். வழக்கம் போல ஆபிரகாம் அடிச்சோம். (போர் அடிச்சா ஆபிரகாம அடிக்கறது எங்க வழக்கம்). ஆனா வழக்கத்துக்கு மாறா எதிர் சீட்ல சீனீயர்ஸ் கூட்டம். வரிசையா ஒரு பதினஞ்சு இருவது பேர் இருப்பாங்க...அதுல ஒருத்தன மட்டும் நல்லா அடையாளம் தெரிஞ்சது. வேற யாரு... எங்க கிட்ட கொஞ்ச நேரம் முன்னாடி friendlya பேசிட்டு போன சீனியர் தான் இப்போ ஆள் கூட்டிகிட்டு வந்து இருக்கார்.

எங்களுக்கு ஏனோ பயமா இல்ல. பிரச்சனைன்னு மட்டும் தெரிஞ்சது. விளையாட்டா இருந்தோம். அசோக் 'நா இல்ல இந்த பசங்க தான்' அப்பிடின்னு செய்கையாலேயே எங்கள மாட்டி விட்டான். இதுல நம்ம சைடுல ஆளுங்க கம்மியா இருக்காங்களே ன்னு எனக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை வேற... 'நம்ம கிட்ட ஆளுங்க இல்லையா' அப்பிடின்னு எங்கெங்கயோ உக்காந்துகிட்டு இருந்த எங்க கிளாஸ் பசங்கள கூப்பிட்டு பக்கத்துல உக்கார வெச்சிகிட்டேன். பிரபு, சிவா, மகாராஜன், அமர்நாத், felix, சதீஷ் இன்னும் கொஞ்ச பேர் வந்து எங்களோட சைடு உக்காந்துகிட்டாங்க.

நண்பர்கள் கூடிட்டாங்க இல்ல....ஒரே காமெடி தான். எல்லார்கிட்டயும் நடந்த விஷயத்த சொன்னோம். 'வரட்டும் டா. என்ன பிரச்சனையானாலும் பாத்துக்கலாம்'. Felix சட்டை கையை மடிச்சிகிட்டே சொல்லிட்டு என்னோட சிக்கன் பீஸ்ல கை வெச்சான். 'அய்.. ஓடி போடா நாயே' ன்னு புடுங்கி வெச்சிக்கிட்டேன். 'மச்சி பேசாம நாமளே அசோக அடிச்சிடலாம்...அவனுங்க பாவப்பட்டு போய்டுவாங்க....எனக்கும் ரொம்ப நாள் காண்டு அவன் மேல' அமர் அவனோட ஆசைய சொன்னான். 'ஜீவா கடைசி ஆசை எதாவது இருந்தா சொல்லுடா... நா நிறைவேத்தி வைக்குறேன்' அசோக் என்னை நக்கலடிசான். 'மச்சா பாரு டா அவனுங்க எக்ஸ்ட்ரா ரைஸ் வாங்கி சாப்பிடறாங்க....பலமா அடி விழும்னு நினைக்குறேன். நம்மளும் நிறைய சாப்பிடலாம் டா. அடி வாங்கணும் இல்ல' ஆபிரகாம் கவலை அவனுக்கு. என்னோட கவலை எனக்கு. 'அசோக்கு, உனக்கு எதாவது ஒண்ணு ஆச்சுனா வருத்தபபடாதே. உன் பிகர நான் பாத்துக்குறேன்.'

பேசிக்கிட்டே மெதுவா சாப்பிட்டோம். மெதுவா சாப்பிட்டா சீனியர்ஸ் பொறுமை இழந்து எழுந்து போய்டுவாங்க அப்பிடின்னு எங்க க்ரூப்ல எவனோ ஐடியா குடுத்தான். உஹும். அவங்க இன்னிக்கு எங்கள ஒதைக்காம நகரறதா இல்லன்னு முடிவோட வந்து இருந்தாங்க.....சரி எவளோ நேரம் தான் வெறும் தட்ட பெசஞ்சி சாப்பிடற மாதிரி நடிக்குறது. எல்லாரும் கெளம்பினோம். அவங்களும் பின்னாடியே வந்தாங்க. கை கழுவிட்டு நாங்க கெளம்பும் போது குறுக்க வந்து நின்னாங்க.

மாடு மாதிரி ஒரு சீனியர் 'என்னடா பிரெச்சன' அப்பிடின்னு கேட்டான். அந்த classic momenta என் வாழ்நாள்ல நா மறக்கவே மாட்டேன். சத்தியமா எனக்கு பயம் வந்துடுச்சு...ஆனா நம்ம அசோக் அப்போவும் கூலா இருந்தான். 'என்னது பிரச்சனையா?' ன்னு கேட்டுட்டு எங்க பக்கம் திரும்பி 'டேய் என்னடா பிரச்சனை?' அப்படின்னு சிரிச்சிக்கிட்டே கேட்டான். எங்க எல்லாருக்கும் சிரிப்பு வந்துடுச்சு. பட் இந்த ஜோக்க சீனியர்ஸ் ரசிக்கல. எட்டி ஒரு உதை விழுந்துச்சு அசோக்குக்கு. தடுமாறி எங்க மேல விழுந்தான். கோவமா F letter worda தமிழ்ல கத்திகிட்டே எழுந்து அந்த சீனியர் மேல பாஞ்சான்.

The epic battle began.

பின் குறிப்பு : ரொம்ப இழுக்கறேன்னு நெனைக்குறேன். என்ன பண்றது? டைம் இல்ல. Next part will be the final part.

1 comment:

  1. super excellent fantastic jeva. reala nadanthatha vida un narration nala eruku.romba elukala correcta eruku. dont end it man just keep going..

    ReplyDelete