பெலிக்ஸ்...தமிழ்ல சரியா வரல. Felix - ஸ்டைல் பையன். First year ல இவன் வேற section. எங்க காலேஜ்ல செல்போன் கொண்டு வர கூடாது அப்பிடின்னு ஒரு ரூல் இருந்தது. எங்க கிட்ட அப்போ எல்லாம் செல்போனே கெடயாது. ஆனா அந்த காலத்துலேயே இவன் நோக்கியா 2100 கொண்டு வருவான். Coolers, bike, watch, hairstyle, dance எல்லாம் ரிச்சா இருக்கும். எல்லாம் Baap ka paisa. ஆனா வாய தொறந்தா ஒரு கூவம் ஆறே ஓடும். கெட்ட வார்த்தைகள் சரளமா வரும். ராயபுரம் ஏரியா வேற. சோ பெரிய ரவுடி அப்பிடின்னு நான் நெனச்சிட்டேன். Third year ல நான் அசோக் felix மூணு பேரும் ஒரே பெஞ்ச். அப்போ இவன் எங்க கிட்ட வாங்காத அடியே கெடயாது. நம்ம கார்த்தி நாய் சேகர் மாதிரினா Felix கை புள்ள மாதிரி.
கோச்சிகாதடா Felix. உனக்கு மன வலிமை ஜாஸ்தி(building strong), ஆனா உடல் வலிமை கம்மி. (basement weak). இவன் கிட்ட மறக்க முடியாத சம்பவங்கள், காலேஜ் சேர்மன் செல்போன் raid வந்தப்போ ஜட்டிகுள்ள செல்போன் ஒளிச்சி வெச்சது, பிரம்மா சார் கிட்ட வம்பிழுத்து அவர மெஸ் ல இருந்து அழுதுகிட்டே ஓட வெச்சது. 'As i am suffering from stomach ache, i want to goto the restroom' அப்பிடின்னு லெட்டர் எழுதி சார கலாய்ச்சது...டூர் போனப்ப யாரையும் தூங்க விடாம இவன் பண்ண கலாட்டாக்கள்...மற்றும் பல.
பிரபு... இட்ட பேரு பிரபு...பட்ட பேரு பேய் கதை. ஏன் அந்த பேரு வந்ததுன்னு தெரியாது. ஆனா இவன பிரபு அப்பிடின்னு யாருமே கூப்பிட்டது இல்ல.
நல்ல பாடகன். ரொம்ப நல்லா பாடுவான். லாஸ்ட் பெஞ்ச் ல ஒகாந்திகிட்டு ரேடியோ ஸ்டேஷன் மாதிரி பாடுவான். நேயர் விருப்பம் கேட்டு அவங்க கேக்கற பாட்ட பாடுவான்....நடுவுல 'வஜ்ரதந்தி....வஜ்ரதந்தி வீக்கோ வஜ்ரதந்தி' மாதிரி 'முனியமமா தேன் மிட்டாய்' அப்பிடின்னு மாத்தி விளம்பரம் வேற பாடுவான். இவன் கூட இருந்தா சிரிச்சிகிட்டே இருக்கலாம். அடிதடிக்கு பயப்பட மாட்டான். ஒரே ஒரு ஜூனியர் பையன அடிக்க 14 பேர கூட்டிகிட்டு போய் ஏரியாவயே கலக்கிட்டு வந்தான்.
ஆபிரகாம் - காதல் மன்னன். ஆனா எல்லாம் failure தான். ஒரு நாள் பாத்தா 'அந்த பொண்ணு என்ன ஏமாத்திட்டா டா..எப்படி எல்லாம் இருந்தோம் தெரியுமா' அப்பிடின்னு 'ஒ'ன்னு அழுவான். அப்புறம் ஒரு மாசம் நல்லா இருப்பான். அடுத்த மாசம் பாத்தா 'இந்த பொண்ணு என் மனச புரிஞ்சிக்கவே மாட்டேன்றா' அப்பிடின்னு அழுவான். எங்களுக்கு சிரிப்பா இருக்கும். இவனோட செல்ல பேரு 'மாடு'. வெறி பிடிச்சா முட்ட ஆரம்பிச்சிடுவான்.
இவன் அப்பா கஸ்டத்துல இருக்கார்....சாரி கஸ்டம்ஸ் ல இருக்கார். அதனால இவன் எது வெச்சி இருந்தாலும் அது அவங்க அப்பா குடுத்ததா இருக்கும். கேட்டா என் கசின் gifta குடுத்தது அப்பிடின்னு ரீல் விடுவான்.
அப்புறம் நான் - இந்த கதைக்கும் இவனுக்கும் சம்மந்தம் இல்ல....ஆனா இவனால தான் இந்த கதையே...(குஷி ல SJ Surya வுக்கு குடுத்த இன்ட்ரோ எனக்கு)
சரி.....நாம சம்பவத்துக்கு போவோமா?
Thaliva....super.....adutha part seekeram release panunga..chennaila ela kadailayum makal velam, elam copiyum vithu pochu,phone calls vanthuketea eruku... "YIPOTHU VIRPANIYEL,POOVAI JEEVAN ELUTHUM,NENJAM MARAPATHELAI....
ReplyDeletemanimozhiik: Hey Jeevan..
ReplyDeleteungala pathu enaku kooda college time story eluthanum nu oru feel vandhduchu
sappa matter aayum sooper ah solirukeenga!
waiting for the next parts...post soon