அன்னிக்கு ஒரு நாள். காலேஜ் பிரேக் டைம். பட்ட பகல். உச்சி வெயில். சேர்மன் ரௌண்ட்ஸ் வர நேரம். நாங்க எல்லாரும் கேன்டீன்ல பப்ப்ஸ் சாப்டோம். அன்னிக்கு சம்பவம் நடக்கல.
சம்பவம் என்னிக்கு நடந்ததுன்னா......
அன்னிக்கு ECE டிபார்ட்மென்ட் symposium. அவங்க எல்லாம் ஒரே பிஸி. நாங்க எல்லாம் வழக்கம் போல ஒரே வெட்டி. லஞ்ச் டைம்ல நான், அசோக், சூரஜ், ஆபிரகாம் எல்லாம் சாப்பிட போய்ட்டு இருந்தோம். ஸ்டெப்ஸ் எறங்கி கீழ வந்துட்டு இருந்தப்ப நம்ம ECE நண்பன் ராஜேஷ் கெலத் யாரோ ஒரு சீனியர் கூட பெஞ்ச் தூக்கிட்டு மாடி ஏறிக்கிட்டு இருந்தான். சரி நம்ம பையனாச்சே அப்படின்னு பேச்சு குடுத்தோம்.
'என்னடா ராஜேஷ். பெண்டு கழலுதா?'
'விட்றா இன்னிக்கு ஒரு நாளாவது வேல பாக்கட்டும்'
' மச்சா ஹெல்ப் ப்ளீஸ்... இந்த பெஞ்ச கொஞ்சம் மேல தூக்கிட்டு போங்கடா' ராஜேஷ் உதவி கேட்டான்.
'மச்சி உன் பிரச்சனை எனக்கு புரியுது... இருந்தாலும் எங்களுக்கு அத விட முக்கியமான பிரச்சனை இருக்குடா... வயத்து பிரச்சனை....வயத்து பிரச்சனைய விட இந்த உலகத்துல வேற எந்த பிரச்சனையும் பெரிய பிரச்சனை எதுவும் இல்லடா. அத மொதல்ல கவனச்சிடு வரோம்'
ராஜேஷ் & சீனியர் பெஞ்ச தூக்கிட்டு கஷ்டப்பட்டு நிக்கிற நேரத்துல கூட மரண மொக்க போட்டேன்.
கூட வந்த ECE சீனியர், நாங்க எல்லாம் ECE டிபார்ட்மென்ட் ஜுனியர்ஸ் அப்பிடின்னு நெனச்சிட்டான். சுர்ர்ருன்னு டென்ஷன் ஏறிடுச்சு தலைவருக்கு.
'டேய்...தூக்கிட்டு போங்கடா னா கேக்க மாட்டீங்களா? மரியாதையா எடுத்துகிட்டு போங்கடா'
'சாரி பாஸ்... நாங்க எல்லாம் மரியாதை தெரியாத பசங்க' அப்பிடின்னு சொல்லிட்டு நாங்க நடக்க ஆரம்பிச்சிட்டோம்.
என்னடா ஜுனியர் பசங்க நம்ம பேச்ச கேக்க மாட்டறாங்களே அப்பிடின்னு அவருக்கு இன்னும் டென்ஷன் ஆய்டுச்சு. பெஞ்ச கீழ வெச்சிட்டு நேரா வந்து எங்கள மடக்கினான். 'உன் பேரு என்ன டா? பேர சொல்லுங்க' அப்பிடின்னு மிரட்ட ட்ரை பண்ணான்..... முடியுமா?
'நான் ஜார்ஜு புஷ்...இவர் சதாம் உசேன்... அவரு நெல்சன் மண்டேலா...பாருங்க மண்டைய பாத்தாலே தெரியுது' அப்படின்னு அசோக் சைடுல ஆபிரகாம சேர்த்து கலாய்ச்சான். சீனியர்க்கு உச்ச கட்ட கோவம். அசோக் ID Carda புடுங்க ட்ரை பண்ணான்.
இந்த இடத்துல எங்க ID கார்டு பத்தி சொல்லியே ஆகணும். காலேஜ்ல ID கார்டு எங்களுக்கு தாலி மாதிரி. காலேஜ் Professors பாடம் நடத்தி எங்க தாலிய அறுப்பாங்க. கிளாஸ்க்கு வெளிய பிரச்சனை பண்ணா நடுவீதியில சீனியர்ஸ், professors..சேர்மனோட அள்ளககைs யாரு வேணும்னாலும எங்க தாலிய அறுக்கலாம். ஷேவ் பண்ணல...முழுக்கை சட்டை போடல...சொல்ற பேச்ச கேக்கல இப்படி எதுக்காக வேணும்னாலும் உங்க தாலி பறிபடலாம். இந்த மாதிரி தாலிய அறுத்துக்கிட்டு போய் மார்வாடி கடைல அடகு வெக்குற மாதிரி அக்கௌன்ட்ஸ் ஆபீஸ்ல குடுத்துடுவாங்க... நாங்க போய் வட்டி கடற மாதிரி fine கட்டி திருப்பி வாங்கிட்டு வரணும்
Back to the சம்பவம்....
நாங்க எல்லாம் சீனியர பிடிச்சி ஒதுக்கி விட்டு 'ID card மேல கைய வெக்காத... உங்க டிபார்ட்மென்ட் symposium க்கு நாங்க எதுக்கு பெஞ்ச தூக்கணும்...' அப்பிடின்னு கொஞ்சம் பக்குவமா மரியாதையோட நாலு கெட்ட வார்த்தை பேசி அனுப்பி விட்டோம். சீனியர் மொரச்சிக்கிட்டே போய்ட்டான். நாங்க எங்க வயத்து பிரச்சனைய கவனிக்க போய்ட்டோம்.
அப்போ நாங்க எதிர்ப்பாககல...பிரச்சனை பெரிசாகும்னு....