கொட்டும் மழை...
கோலம் போடும் வானவில்...
கருமேகங்கள் வழியே
எட்டி பார்க்கும் கதிரவன்...
குளிர்நிலவில் குதித்தாடும்
கடல் அலைகள்....
இவை எதுவும் தேவை இல்லை எனக்கு
ரசிப்பதற்கு ஒரு பெண் இருபது போதாதா
நான் வாழ்வை ரசிப்பதற்கு?
*******************************************************
ஒரே உருவம் கொண்டு
உலகில் ஏழு பேர் உண்டாம்.....
உதடு பிரியாத உன் புன்னகை
தரை தொடாமல் உன் நடை
பிள்ளை மொழியாக உன் கிள்ளை தமிழ்
ரோஜாவுக்கே வண்ணம் தரும் உன் வெட்கம்
இன்றே தீர்ந்து விடுவது போல்
நீ சிரிக்கும் சிரிப்பு
சத்தியமாய் சொல்கிறேன்
உன்னை போல் ஏழு பெயரெல்லாம் இருக்கவே முடியாது
*****************************************************************************
கொலை செய்ய சொன்னால் கூட
ஒரே நொடியில் செய்து விடுவேன்
இத்தனை அழகை
காதலிக்க அல்லவா சொல்கிறார்கள்
எத்தனை யுகங்கள் வேண்டுமோ?
*************************************************************************
-- Dear! Jap Evans
Ithellam konjam overaa thaan irukku.. anaalum yenna panrathu..
ReplyDeleteHmm... Thanks for being the first person to comment in my blog. Aana nee yaarunu therla..Who is this?
ReplyDelete