சுஜாதாவின் வரிகள்.
ஹைக்கூ என்றால் என்ன?
ஹைக்கூ என்பது பதினேழு அசைகள் (சிலபல்ஸ்) கொண்ட ஒரு ஜப்பானிய கவிதை வடிவம். அதை இந்த நூற்றாண்டில் நவீனபடுத்தி மூன்று/நான்கு வரிக் கவிதைகளாக்கி விட்டனர்.
எது ஹைக்கூ?
ஹைக்கூ என்பது ஒரு snapshot என்று சொல்வார்கள். தினவாழ்வில் நாம் பார்க்கும் ஆச்சர்யமான கணங்களை ஒரு சிறிய கவிதையில் சிறைபடுத்தும்போது எந்தவிதமான உருவகமோ உவமையோ சமூகச்சாடலோ இன்றி வாசகனின் சிந்தனை என்னும் குளத்தில் எறியப்பட்ட ஒரு சிறு கல்லாக இருக்க வேண்டும்.
உதாரணங்கள்:
நள்ளிரவில்
தூரத்தில்
ஒரு கதவு சார்த்தப்பட்டது
-----------------------------------------
சாக்கடையில்
மிதக்கும் முகமூடி
மெல்லத் தலையசைக்கிறது
---------------------------------------------
வெயிலில்
தலைமயிர் உலர்கிறது
தலை இல்லாமல்
--------------------------------------------
முடிவு பெறாத கட்டடம்
கொசுவலைக்குள்
கூலிக்காரியின் குழந்தை
-------------------------------------------
மொட்டை மாடி
எட்டிப் பார்த்துக்
குறைக்கும் நாய்

சைக்கிள் ரிக்க்ஷாவில்
பாரதி வேடத்தில்
மூன்று குழந்தைகள்.
------------------------------------------
இறுதி ஊர்வலத்தில்
உறவினர் அழுகையைவிட
சப்தமாய்
பட்டாசு

எது ஹைக்கூ இல்லை ?
எத்தனை பேர்
இழுத்தும் என்ன
சேரிக்குள் வரவில்லை
தேர்.
சமூக விமர்சனம் பொதிந்திருப்பதால் இது உண்மையான ஹைக்கூ இல்லை.
கல்யாண நேரத்தில்
வீடு வெள்ளையடிக்கப்பட்டபோது
விட்டதில் அவள் செருகிவைத்திருந்த
கனவுகளும் நிறம் மாற்றப்பட்டது
'கனவுகளை' 'கடிதங்களாய்' மாற்றினால் ஹைக்கூ வடிவம் பெறுகிறது.
நீங்களும் ஹைக்கூ எழுதி பாருங்களேன். நீங்கள் பார்த்த ஆச்சர்யம் ஒன்றை மூன்று வரிகளில் சிறைபடுத்த வேண்டும்.