முன்னெல்லாம் 'இந்தியர், தமிழர் ன்னு சொல்லிக்க வெட்கப்படறாங்களே' ன்னு நிறைய கவலைப்படுவேன். ஆனா சமீப காலங்கள்ல ரொம்ப ஓவரா பெருமைப்பட்டுக்குறோமோ ன்னு தோணுது. ஈமெயில் ல கண்டு பிடிச்சது தமிழன், மைக்ரோசாப்ட் CEO இந்தியன் ன்னு ஆரம்பிச்சி, பொண்ணுங்க ஏன் பொட்டு வைக்கறாங்க, மாடு ஏன் அம்மா ன்னு கத்துது ன்னு போய் இப்போ லேட்டஸ்ட்டா கமலஹாசன் எபோலா வரும் ன்னு அந்த காலத்துலேயே சொன்னாருன்ற வரைக்கும் கொண்டு வந்துட்டாங்க.
இந்த மாதிரி எல்லாத்தையும் இந்தியர்கள் தான் கண்டு புடிக்கறாங்க ன்னு முன்னாடியே தெரிஞ்சி தான் 2012 ஹாலிவுட் படத்துல உலகம் அழிய போகுது ன்னு இந்தியன் தான் பர்ஸ்ட் கண்டுபிடிக்கறான் ன்னு காட்டி இருக்காங்க. (அயய்யோ நானும் மாறிட்டேனே)
நண்பர் ஒருத்தர் இது ரிலேட்டடா பேசும் போது டய்மிங்க்கா ஒரு கதைய ஞாபகப்படுத்தினார். ஏற்கனவே தெரிஞ்சாலும் பெட்டி செய்தியா அது இதோ.
சைனாக்காரன் அவங்க ஊர்ல அகழ்வாராய்ச்சி பண்ணும் போது மண்ணுக்குள்ள copper wire பதிஞ்சி இருந்தத கண்டு பிடிச்சானாம். உடனே எல்லா உலக விஞ்ஞானிகள கூப்பிட்டு சொன்னானாம் 'பாத்திங்களா? அந்த காலத்துலேயே நாங்க டெலிபோன் கனேக்க்ஷன் வெச்சி இருந்தோம்'.
ரஷ்யாக்காரன் அவங்க ஊர்ல அகழ்வாராய்ச்சி பண்ணும் போது மண்ணுக்குள்ள fiber optic cable பதிஞ்சி இருந்ததாம். உடனே எல்லா உலக விஞ்ஞானிகள கூப்பிட்டு சொன்னானாம் 'பாத்திங்களா? அந்த காலத்துலேயே நாங்கஇன்டர்நெட் கனேக்க்ஷன் வெச்சி இருந்தோம்'. இந்தியன் பார்த்தான். ஊருக்கு போய் அவனும் நிலத்த தோண்டினான். எல்லா உலக விஞ்ஞானிகள கூப்பிட்டு காட்டினான். 'என்னயா? ஒண்ணுமே இல்லையே' ன்னு விஞ்ஞானிகள் கேட்டாங்க. இந்தியன் 'பாத்திங்களா, ஒரு wire-ம் இல்ல. அந்த காலத்துலேயே நாங்க wireless communication வெச்சி இருந்தோம்' ன்னு சொன்னானாம்
'மனிதனும் மர்மங்களும்' புத்தகத்துல மதன் சொல்றாரு 'கூட்டுப்ரார்த்தனை, நெற்றிக்கண் ' எல்லாத்துக்கும் ஒரு அர்த்தம் இருக்கு. விஞ்ஞானிகள் இப்போ தான் கண்டுபிடிக்கறாங்க ஆனா நாம ரொம்ப வருஷமா இத தெரிஞ்சி வெச்சி இருக்கோம்' ன்னு. இந்த மாதிரி விஷயங்கள்ல ஒரு pattern இருக்கு. அதாவது நாம ஒரு விஷயம் எதுக்கு பண்றோம்ன்னு தெரியாம பரம்பர பரம்பரையா செஞ்சிக்கிட்டு வருவோம். வெள்ளகாரன் தான் நமக்கு கண்டு புடிச்சி சொல்லுவான் 'தமிழன் இத முன்னாடியே தெரிஞ்சி வெச்சி இருக்கான்' ன்னு. நமக்கும் அப்போ தான் தெரிய வரும். இருந்தாலும் காலர தூக்கி விட்டுக்குவோம். இதுக்கும் ஒரு (தெரிஞ்ச) கதை சொல்றேன்.
பலநூறு வருஷங்கள் முன்னாடி, முனிவர் ஒருத்தர் குருக்குலத்துல பாடம் சொல்லி கொடுத்தாராம். அங்க ஒரு பூனை சுத்திக்கிட்டே இருந்துச்சாம். பசங்களுக்கு கவனம் சிதறுதே ன்னு அத அங்க இருக்க ஒரு தூண்ல கட்டி போட சொன்னாராம். 'இனிமே தினமும் நா படம் நடத்தும் போது இந்த பூனைய கட்டி போட்டுங்க' ன்னு சொன்னாராம். சிஷயர்கள் இத ரொம்ப நாளைக்கு பின்பற்றி இருக்காங்க. அந்த முனிவர் இறந்து போய் அவரோட தலைமை சிஷ்யர் ஒருத்தர் குரு ஆனாராம். அடுத்த நாள் அவர் பாடம் நடத்த வரும்போது அங்க சுத்திக்கிட்டு இருந்த பூனைய காணோம். புது குரு பதட்டம் ஆயிட்டார். 'சிஷயர்களே, உடனே போய் ஒரு பூனைய புடிச்சிக்கிட்டு வாங்க. அத தூண்ல கட்டாம பாடம் எடுக்க கூடாது ன்னு உங்களுக்கு தெரியாது?' ன்னு சத்தம் போட்டாராம்.
அந்த கதையோட extension . (படம் முடிஞ்சி டைட்டில் போட்டு முடிச்சதும் ஒரு சீன் இருக்குமே அது மாதிரி). இப்படியே ரொம்ப வருஷம் ஏன் பண்றோம் ன்னு தெரியாம இந்தியர்கள் பூனையை கட்டிப்போட்டுபாடம் நடத்திக்கிட்டு இருக்காங்க. பல நூற்றாண்டுகள் கழிச்சி விஞ்ஞானிகள் 'பூனைய பக்கத்துல வெச்சிக்கிட்டு படிச்சா பர்ஸ்ட் ரேங்க் எடுக்கலாம். இத தான் இந்தியர்கள் பல நூறு வருஷங்கள் முன்னாடில இருந்து செஞ்சிக்கிட்டு இருக்காங்க' ன்னு கண்டு பிடிக்கறாங்க. உடனே நம்ப பசங்க 'நாங்க எல்லாம் அப்போவே அப்பிடி..ஆஹ்ங்' ன்னு பேஸ்புக் ல போட்டுக்கறாங்க.
'சரி நைனா இப்போ இன்னா தான் சொல்ற ?'
என்ன சொல்றேன்னா
ஒன்னு) நம்ப குருட்டுத்தனமா ஃப்பாலோ பண்ற பல விஷயங்கள ஏன் பண்றோம் ன்னு தெரிஞ்சி வெச்சிக்கணும். 'ஆதி தமிழன் ஆண்டவன் ஆனான். மீதி தமிழன் அடிமைகள் ஆனான்' ன்னு பில்லா படத்துல அஜித் சொல்லி இருக்காரு. சோ ஆதி தமிழன்/இந்தியன் பண்ணதுக்கு என்ன அர்த்தம் ன்னு தெரிஞ்சிக்கணும்.
ரெண்டு) புதுசு புதுசா க்ரியேடிவ்வா நிறைய கண்டு பிடிக்கணும்.
இவளோ பெரிய பழைய நாகரிகத்த வெச்சி இருக்க நாம இன்னும் நிறைய கண்டு புடிச்சி இருக்கலாம். ஆதி தமிழன்/இந்தியன் நிறைய கண்டு புடிச்சி தான் இருக்கான். நடுவுல தான் 'உணவே மருந்து மருந்தே உணவு', 'குந்தித் தின்றால் குன்றும் கரையும்' ன்னு நம்ம கான்சென்ட்றேஷன் எல்லாம் சாப்பாட்ல போய்டுச்சு ன்னு நெனைக்கறேன்.
எல்லாம் ஒரு வேலை கல்வி முறை மாறினதுனாலயோ? ஒழுங்கா குருக்குல கல்வி இருந்திருக்கலாம். புதன் கிரகத்துக்கு ராக்கெட் விட சொல்லி குடுத்த நம்ப கல்வி, புலி முன்னாடி பதினைஞ்சு நிமிஷமா ஒக்காந்திருந்தும் எப்படி உயிர் பிழைக்கறதுன்னு சொல்லி தரலையே.
'இவளோ சொல்றியே நீ என்னடா பண்ண' ன்னு கேக்குறீங்களா?' அவளோ அறிவு இருந்தா நா ஏங்க இங்க வெட்டியா பேசிக்கிட்டு இருக்கப் போறேன்.
பி.கு. இத படிச்சிட்டு நா தமிழன இழிவு படுத்தறேன் ன்னு நெனைக்காதீங்க. தமிழன் ன்ற பெருமை எப்பவுமே உண்டு. ஆனா கர்வம் கெடையாது. "நா தியாகி இல்ல..அதே சமயத்துல துரோகியும் இல்ல" (மாப்ள எங்கயோ கேட்ட மாதிரி இல்ல? )