Friday, January 24, 2014

தற்செயலானவுடனிகழ்ச்சிகள்

'ஏழுக்கடல் தாண்டி உனக்காக வந்தேனே..இந்த நதி வந்து கடல் சேருதே. வெண்ணிலவை வெட்டி மோதிரங்கள் செய்வேனே. அது உனை சேர ஒளி வீசுமே '

ரேடியோ-வில் பாட்டு ஓடிக்கொண்டிருந்தது.
ஹாஸ்டல் முதல் மாடியில் இருக்கும் தன பால்கனியில் அமர்ந்து சனிக்கிழமை இரவை ரசித்துக்கொண்டிருந்தாள் ஆர்த்தி.
வயிறு பசித்தது.. 'எங்க போனா இந்த சங்கி?'.. மறுபடியும் ஒருமுறை எஸ்.எம்.எஸ். அனுப்பினாள்.
'வெய்டிங் ஃபார் யு. கம் குயிக். அயம் ஸ்டார்விங்'
செண்ட் பட்டன் அழுத்துவதற்குள் வந்து நின்றது ஒரு கருப்பு நிறக்  கார்.
ஐந்து நிமிடம் ஆகியும் வண்டியில் இருந்து யாரும் இறங்கவில்லை.
ஆர்த்தி அந்த காரை அடையாளம் கண்டுக்கொண்டாள். சிறிது நேரம் கழித்து சங்கி இறங்கினாள். காரில் உள்ளவருக்கு கை அசைத்துவிட்டு மாடி ஏறி அறைக்கு வந்தாள்.

ஆர்த்தி சங்கி-க்கு  கதவை திறந்தாள்.
'ஏய் திருடி. கார்ல என்ன நடந்தது சொல்லு. வந்து அஞ்சு நிமிஷம் ஆகியும் நீ எறங்கவே இல்ல?'
சங்கி வெட்கப்பட்டு, அதை மறைக்க முடியாமல் மழுப்பினாள்.
'உனக்கு பசிக்குதுன்னு சொன்ன இல்ல? வா சாப்பிட போலாம்'
'பார்றா... திடீர்ன்னு அக்கறை.. அதெல்லாம் அப்பறம் சாப்பிடலாம். நீ சொல்லு. ரொமான்ஸ்ஸா? இன்னும் கல்யாணம் ஆக மூணு மாசம் இருக்கு. அதுக்குள்ள நீ மாசம் ஆய்டாத'
'போடி..' சங்கி பொய்யாக அடித்தாள் .

இருவரும் ஹாஸ்டல் மெஸ் போக தயாரானார்கள். சங்கி தலை முடியை பிரித்து மீண்டும் வாரிக்கொண்டாள். ஆர்த்தி முகம் கழுவிக்கொண்டே கேட்டாள்.

'ஹே சங்கி. எப்போ உன் ஆள எனக்கு இன்ட்ரோடியுஸ் பண்ண போற?'
'சஸ்பென்ஸ்...'
'அட்லீஸ்ட் பேராவது சொல்லுடி'
'எதுக்கு? என்ன ஓட்டறதுக்கா? மேரேஜ் இன்விடேஷன் தரும்போது நீயே பாத்துக்கோ'
'அடிங்..பல்ல ஓடைப்பேன். என் ஆள பத்தி மட்டும் எல்லாம் கேட்ட இல்ல?
'ஆமா. ஆனா உன் ஆளு பேர நீ சொல்லல இல்ல?'
'நீ சொன்னா தான் நா சொல்லுவேன்'
'நீ சொன்னா தான் நா சொல்லுவேன்'
இருவரும் முறைத்தார்கள். சிரித்தார்கள்.. மெஸ் நோக்கி நடந்தார்கள்.

சாப்பிட்டு முடித்து அறை திரும்பி உள்ளே நுழையும்போதே சங்கியின் செல்போன் அழைத்தது.
தெரிந்த நம்பர் தான். அழைப்பது தீபக்.
போனை பார்த்து சிரித்தாள். ஆர்த்தி புரிந்துக் கொண்டாள்.
'இப்ப தானடி பாத்துக்கிட்டீங்க.'
'போடி.. சங்கி ஆர்த்தியை தள்ளி விட்டு பால்கனி நோக்கி ஓடினாள் .
'சீக்கிரம் முடிச்சிட்டு வா. நானும் என் ஆள் கிட்ட பேசிட்டு வரேன்'
ஆர்த்தி அழைத்த நம்பர் பிஸியாக இருந்தது. மீண்டும் முயற்சித்தாள்.

தீபக் வீடு வந்து சேர்ந்தான். லுங்கியுடன் கம்ப்யூட்டரில் வேலை பார்த்து கொண்டிருந்தான் வருண். செல்போனில் பேசிக்கொண்டே ஷுவை கழற்றினான் தீபக். 'ஹ்ம்ம்...வீட்டுக்கு வந்துட்டேன்..அப்பறம் கால் பண்றேன்.'
'யாருடா?' வருண் கேட்டான்.
'அம்மா மச்சி... வீட்டுக்கு வந்துட்டியா... சாப்டியா னு  எப்ப பாத்தாலும் கேள்வி கேட்டுட்டே இருக்காங்க' தீபக் அலுத்துக்கொண்டான்.
வருண் சுழர் நாற்காலியில் சுற்றி திரும்பினான்.
'நம்பிட்டேன்'
தீபக் செல்போன் மறுபடி உயிர்பெற்றது. இந்த முறை அழைத்தது ஆர்த்தி.
'ஹலோ? ஹ்ம்ம். ஹ்ம்ம்.' ஹ்ம்ம் கொட்டிகொண்டே உள்ளறை சென்றான்.

'ஏன்டா போன் எடுக்கல?'
'அம்மா பேசிட்டு இருந்தாங்க'
'ஹ்ம்ம்'
'கோச்சிக்கிட்டியா?'
'ஆமா.. சனிக்கிழமை கூட ஆபீஸ்ல குப்ப கொட்டனுமா? என் ரூம்மேட் பாரு. ஜாலியா என்ஜாய் பண்றா அவ பாய் பிரெண்ட் கூட'
'சரி சரி .. நாளைக்கு கண்டிப்பா மீட் பண்ணுவோம்'
'சாப்டியா?'
'இப்போ தான் வீட்டுக்கு வந்தேன். மதியமே சாப்பிடல'
'லூஸு.. போய் சாப்பிடு.. நா நைட் கால் பண்றேன்'
'வேணாம்.,, நா அம்மாக்கு கால் பண்ணிட்டு அப்பறமா உனக்கு கால் பண்றேன்'
'ஏன்டா அம்மாக்கு இப்படி பயப்படற?'
'அதெல்லாம் இல்ல. நா தூங்கறதுக்கு முன்னாடி கேட்கற கடைசி குரல் உன்னுதா இருக்கணும்.'
'சரி சரி கால் பண்ணு.. நைட் பேசுவோம்'

தீபக் ரூமில் இருந்து வெளியே வந்தான். வருண். முறைத்தான்.
'எப்டி சமாளிச்சேன் பாத்தியா?' வெற்றி சிரிப்பு சிரித்தான் தீபக்.
'ஏன்டா காதல்ன்ற பேர்ல எங்கள மாதிரி இருக்கற யூத்-தையும் சேத்து அசிங்க படுத்துறீங்க'
'விடு மச்சி... பல்லு  இருக்கறவன் பகோடா சாப்பிடறான்.'
'மகனே.. நீ பண்ற வேலைக்கு எல்லாம் ஒண்ணா சேத்து என்னிக்காவது மாட்டுவ'
'மச்சி.. இந்த சுதந்திரம் எல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடி தான். கல்யாணம் ஆயிட்டா பொண்டாட்டி பின்னாடியே சுத்த வேண்டியது தான்'
'டேய் சீரியஸ்ஸா சொல்றேன் கேளு. கல்யாணம் எல்லாம் பிக்ஸ் பண்ணியாச்சு.. இனிமே இப்பிடி பொய் சொல்லிக்கிட்டு திரியாத.'
'யப்பா. ஹரிச்சந்திரா.. இதெல்லாம் சப்ப மேட்டர். நீ எல்லாம் எப்போடா வளருவ? போ. மேட்ரிமோனியல் சைட் தானே நோண்டிட்டு இருந்த.. போய் அதுல எதாவது மாட்டுதா பாரு'

தீபக் அம்மாவிடம் பேசி முடித்ததும் கால் செய்தான்.. சங்கி க்கு.
'சொல்லுடா'
'என்ன பண்ற?'
'இபோ தான் சாப்பிட்டு வரேன் என் ரூம் மேட் கூட'
'ஹ்ம்ம். ரொம்ப நாளா கேக்கறேன் உன் ரூம் மேட் க்கு இன்ட்ரோ குடுன்னு'
'குடுத்தா?'
'குடுத்தா அவளையும் சேத்து கரெக்ட் பண்ணுவேன். ஒரே மேடைல ரெண்டு கல்யாணம்'
'அய்யே.. ஆசைய பாரு. நா இன்ட்ரோ தரேன். நீ முடிஞ்சா கரெக்ட் பண்ணிக்கோ'
'இந்த ஸ்டேட்மென்ட் க்கு என்னிக்காவது நீ பீல் பண்ணுவ மகளே'

ஆர்த்தி தன் போன் எடுத்து தீபக்-க்குக்கு கால் செய்தாள். பிஸி லைன்.
சங்கி ஒரு மணி  நேரம் போனில்  பேசி முடித்துக்  களைப்புடன் பால்கனியில் இருந்து உள்ளே வந்தாள்
'என்னடி ஆர்த்தி. தூங்கலையா?'
'உனக்கு என்னப்பா? உன் ஆளு கரெக்டா டைம்க்கு கால் பண்ணிடறான். என் ஆளு கால் பண்ணா எடுக்கவே மாட்றான்'
சொல்லும் போதே ஆர்த்தி கையில் செல்போன் துடித்தது.
'இப்போ என் டர்ன்' என்று சிரித்துக்கொண்டே பால்கனி சென்றாள் ஆர்த்தி.

'யார் கூட டா மொக்க போட்டுட்டு இருந்த?
'என்ன ஆர்த்தி? அம்மா கிட்ட பேசிட்டு உனக்கு கால் பண்றேன்ன்னு சொன்னேன் இல்ல. நீ ஏன் நடுவுல கால் பண்ணிட்டே இருக்க?'
'சரி சரி சாரி டா. என் பிரெண்ட் மட்டும் எந்நேரமும் அவ பாய்பிரெண்ட் கூட கடலை போட்டுட்டே இருக்கா.. அதான்'
'அவள எனக்கு இன்ட்ரோ குடு. .. அவளையும் சேத்து கரெக்ட் பண்றேன்.'
'டேய் ஒரு கேர்ள் பிரெண்ட் கூட டைம் ஸ்பெண்ட் பண்றதுக்கே வழிய காணோம்.. உனக்கு இன்னொண்ணா?'
'அப்போ டைம் இருந்தா கரெக்ட் பண்ணிக்கோ ன்னு  சொல்ற? '
'மூஞ்சிய பாரு. நா இன்ட்ரோ தரேன். முடிஞ்சா கரெக்ட் பண்ணிக்கோ'

அடுத்த நாள். ஆர்த்தி அரை கதவை திறந்து உள்ளே நுழைந்தாள்.
'என்ன சங்கி? எனக்கு முன்னாடி ரூமுக்கு வந்துட்ட? சண்டே தானே இன்னிக்கு? உன் ஆளு கூட ஊர் சுத்தலையா?'
'அவனுக்கு ஏதோ வேலையாம்டீ'
'ஹ்ம்ம். நேத்து என் ஆளுக்கு வேல.. இன்னிக்கு உன் ஆளுக்கு வேல'
சங்கி பெட்-டில் அமர்திருக்க, பெட் முழுக்க திருமண அழைப்பிதழ் பரப்பி இருந்தது.
'இந்தா... என்னோடமேரேஜ் இன்விடேஷன் வந்துடுச்சு. உனக்கு தான் பர்ஸ்ட்.'
ஆவலாய்  வந்து வாங்கி கொண்டாள்  ஆர்த்தி.
'உனக்கு குடுக்க கூடாது நு தான் பார்த்தேன். இன்னும் உன் ஆளு பேரு எனக்கு சொல்ல இல்ல.' சங்கி கோபித்தாள்.
ஆர்த்தி திருமண அழைப்பிதழை திறக்காமல் மடித்து வைத்தாள்.
'சரி ஒண்ணு  பண்ணலாம். ரெண்டு பெரும் ஒரே நேரத்துல பேர் சொல்லுவோம். அப்பறம் நா இன்விடேஷன் பாக்கறேன்'
'ஓகே. ரெடி.. ஒன்.. டூ..த்ரீ'
'தீபக்....'
அறை முழுக்க பெயர் எதிரொலித்தது.

அன்றிரவு. அடையாரில் ஒரு ஐந்து நட்சித்திர ஹோட்டல்.ஆர்த்தியும் சங்கியும்  மெழுகு ஏற்றிய டேபிள் ஒன்றில் அமர வைக்கப்பட்டார்கள்.
'கடைசியா உன் ஆள மீட் பண்ண போறேன். ' ஆர்த்தியின் கைப்பிடித்து சந்தோஷப்பட்டாள் சங்கி.
'சேம் பின்ச்'
'இத விட சேம் பின்ச்' பாரேன். ரெண்டு பேருக்கும் ஒரே பேரு. பயங்கர கோயின்சிடன்ஸ் இல்ல?'
''நா மொதல்ல என் தீபக்-க்கு பேர் மாத்தி வைக்க போறேன். ரொம்ப கன்பியுஸ் ஆகுது இல்ல?'
ஆர்த்திக்கு எஸ்எம்எஸ் வந்தது. தீபக்கிடம் இருந்து.
'ஹே.. என் தீபக் வந்துட்டானாம். வெளிய இருக்கான். நா போய்  கூட்டிட்டு வரேன்.'
''சீக்கிரம் வா.'

ஆர்த்தி தீபக்கை அழைத்துக் கொண்டு வந்தாள்.
டேபிளில் சங்கி ஒருவனிடம் சிரித்து பேசி கொண்டிருந்தாள்.
'சங்கி...திஸ் இஸ் தீபக்' ஆர்த்தி அறிமுகப்படுத்தினாள்.
'ஹாய் தீபக்.   ஆர்த்தி.. இது என் தீபக்' ஆர்த்தி ஹாய் சொன்னாள்.
தீபக்கும் தீபக்கும் ஹாய் சொல்லி கை குலுக்கினார்கள்

“Coincidence is God's way of remaining anonymous.” 
― Albert EinsteinThe World As I See It

Saturday, January 11, 2014

Peelings

Last Saturday I went to a Cineplex with my friends to watch an action movie.
Just like everyone, I was so involved in the movie that it left after effects in me.

Everyone gets that weird feeling after watching an heroic movie.
You would break your knuckles unnecessarily, feel an inch taller, wanting to hit some bad guys and would walk with a rock music behind….feeling like an hero.

When the movie was over, we came out and I walked to car parking alone to get my car to the front gate where my friends were waiting. (of course, with a rock music inside my head. J). Suddenly something disturbed my thoughts and I came to the real world. I looked behind and saw a black car following me.

The face didn’t look familiar. A middle aged man with beard, sun glasses on and a cigar casually hanging from his lips. I started walking again and the car followed me slowly. I increased my pace and the car did the same. I deliberately stopped and the car stopped.

I got a bit nervous and started thinking the ‘movie’ way - When was the last time I indulged in a fight or mentally tortured someone? Did someone hire a thug for messing up with them? But I couldn’t remember of any specific event.

I gathered some courage (the heroic feel helped) and went straight to the car and knocked the door gently. The glasses rolled down.

‘Excuse me Boss. I feel as if I am taking your big car for a walk. Why are you following me?’

He took a deep puff and replied:

‘So that I can park my car once you take yours out. The parking lot is full’.


The hero died pathetically. L

 (story from my old PST)