கொறஞ்சது அம்பது பேர் இருந்திருப்பாங்க அந்த எடத்துல. அசோக் அடிக்க ஆரம்பிச்சதும் கூட்டம் சிதரி நகர்ந்துச்சு. சண்ட போட இடம் விட்ட மாதிரி இருந்தது. சண்ட போடும் மக்கள் தனி தனியா பிரிஞ்சாங்க. சண்டையல நடந்த எல்லாத்தையும் நா பாக்கல. சோ நான் பாத்து ரசிச்ச விஷயங்கள சொல்றேன்.
நிஜமான சண்டை நாம பாக்கற சினிமா சண்டை மாதிரி துளி கூட இல்ல. ரெண்டு ஆள் சண்ட போடறாங்கன்னா அதுல முதல் ஆள் கெட்ட வார்த்த சொல்லி இன்னொரு ஆள அடிக்கற மாதிரி கை வீசுவான். இல்ல உதைக்க ட்ரை பண்ணுவான். அடிச்சு முடிச்சதும் பயத்துல கொஞ்சம் பின் வாங்குவான். இந்த டைம ரெண்டாவது ஆள் பயன்படுத்தி அவன் அடிக்க ஆரம்பிப்பான். இப்படி சண்டை மெதுவா நடக்கும். ஆனா அடி காட்டு அடியா விழும். கண்ண மூடிகிட்டு கைய சுத்துவாங்க. தெரியாம நம்ம மேல பட்டா செம வலி வலிக்கும். அப்படி தான் எங்க சண்ட போய்கிட்டு இருந்தது....
இதுல நடந்த காமெடிகள் ஒண்ணுன்னா சொல்றேன். (மேல படிக்கறதுக்கு முன்னாடி நெஞ்சம் மறப்பதில்லை - பாகம் ஒன்று மறுபடியும் படிச்சிகோங்க. அப்போ தான் எப்படி பட்ட ஆள் சண்டை போடும் போதும் எப்படி இருந்தான் அப்படின்னு தெரியும்)
அசோக் ஒரு சீனியர் கூட சண்டைக்கு தயாரா நின்னான். ஒரு அடி விழுந்துச்சு. அசோக் தன்னோட லொட்ட கைய மடக்கி குத்து விட ரெடியா நின்னான். அப்போ அந்த பக்கம் வந்த அமர் அசோக்க காப்பாத்த கூட வந்து நின்னான். வந்து நின்னது தப்பு இல்ல. ஆனா வந்த டைம் சரி இல்ல. அசோக் கண்ண மூடி சுத்தி அடிக்க வந்த நேரம் அமர் குறுக்க வந்துட்டான். அடி அமர் மேல பட்டு ரத்தம வந்துடுச்சு. அசோக்க்கு அப்போ யார அடிச்சோம் அப்படி எல்லாம் யோசிக்க டைம் இல்ல. அடுத்த அடி அடிக்க வலது கைய சுத்தினான். அந்த சைடு ஆபிரகாம் மேல விழுந்தது ... கடைசி வரைக்கும் அவன் ஒரு அடி கூட சீனியர அடிக்கல. பக்கத்துல இருந்த எங்க பசங்களையே மாத்தி மாத்தி அடிச்சி இருக்கான். மான் கராததே மாதிரி எதோ புது டெக்னிக் போல.....
இன்னொரு பக்கம் நம்ம felix. தெலுகு ஹீரோ மாதிரி தொண்ட கிழிய 'டேய்ய்ய்ய்...' அப்பிடின்னு விரல் நீட்டி கத்தினான். சீனியர் அவன் கத்தினத மதிக்கவே இல்ல.... 'பொலிச்...' ன்னு ஒரு அறை விழுந்தது felixkku. Felix தன்னோட கன்னத தடவி விட்டுட்டு மறுபடியும் 'டேய்ய்ய்ய்...' ன்னு கத்தினான். 'பொலிச்...'. இன்னொரு கன்னத்துல அறை. அப்பவும் அவன் நிறுத்துல. சண்டைக்கு நடுவுல நடுவுல felix விடர 'டேய்' சவுண்ட் கேக்கும். நாங்களும் 'நம்ம பையன் சரியான அடி அடிச்சிட்டான் போல' அப்படின்னு பாப்போம்.....ஆனா நாங்க பாக்கும் போது எல்லாம் felix அடி வாங்கிட்டு தான் இருந்தான். ஒரு கட்டத்துல அவன கீழ போட்டு மிதிசசிகிட்டு இருந்தான் ஒரு சீனியர். ஒரு மிதி வாங்கி தரைல படுத்ததும் நம்ம ஆளு கை ஊனி எழுந்துக்க பார்பான். உடனே ஒரு மிதி விழும். மறுபடியும் தரைக்கு போய்டுவான். மறுபடியும் எழுந்துக்க பாப்பான். மறுபடியும் உதை. தூரத்துல இருந்து பாக்க அவன் என்னோவோ சண்டைக்கு நடுவுல தண்டால் எடுத்துகிட்டு இருந்த மாதிரி இருந்தது.
பேய் கத பிரபு அண்ட் மகாராஜன் கோ ஒரு டெக்னிக் யூஸ் பண்ணாங்க. பிரபு ஒரு சீனியர் கூட சண்ட போடும் போது மகாராஜன் நல்லவன் மாதிரி அந்த சீனியர தடுப்பான். 'சண்டை வேணாம்...அடிக்காதீங்க' அப்படின்னு தடுக்கற மாதிரி கைய பிடிச்சி பின்னால மடக்கி ஆள பிடிச்சிடுவான். அதுக்கு மேல சீனியர் நகர முடியாது. அந்த டைம பிரபு பயன்படுத்தி சீனியர போட்டு அடி பின்னிடுவான். இப்படியே ரெண்டு பேரும் ஏமாத்தி ஏமாத்தி சீனியர அடிச்சிக்கிட்டு இருந்தாங்க.
கார்த்தி சண்ட ஆரம்பிக்கும் போது எங்க கூட இல்ல. சண்ட நடக்கும் போது தூரத்துல தண்ணி குடிச்சிட்டு இருந்தான். சரி குடிச்சிட்டு வருவான்னு பாத்தா ரிவர்ஸ் டைரக்ஷன் ல திரும்பி மெஸ் உள்ள போய்ட்டான்.
மத்தபடி சண்டை சாதரணமா போயிட்டு இருந்தது. அவங்க எங்கள அடிக்க...எங்கள அவங்க அடிக்க....கெட்ட வார்த்தைகள் காத்துல மிதந்தது. தப்பி தவறி எங்க பசங்க அடிச்ச கொஞ்ச அடி அவங்க மேலயும் பட்டு இருந்தது. நல்ல வேலையா சுரஜ் போய் எங்க IT department HOD ய கூட்டிட்டு வந்தான். சண்டை நிறுத்தப்பட்டது. HOD இன்னும் கொஞ்ச staffs கூட கூட்டிட்டு வந்தாரு. எல்லாரையும் தன்னோட ரூமுக்கு கூட்டிட்டு போனாரு. எங்களுக்கு எல்லாம் எங்க HOD வந்ததுல நிம்மதி. அவரு எப்பவும் எங்க சப்போர்ட் தான்.
கூட்டிகிட்டு போகும் போது எதிர்ல CSE department நியூட்டன் சார் அசோக்க பாத்தாரு. டக்குனு அசோக் தன்னோட முகத்த பாவமா வச்சிகிட்டான். நியூட்டன் சார் எங்க HOD ய பாத்து 'சார், இவன எல்லாம் ஏன் சார் கூட்டிகிட்டு போறீங்க... இவன பாத்தா சண்ட போடறவன் மாதிரியா இருக்கு?' அப்படின்னு கேட்டுட்டாரு. நானும் felixum மாறி மாறி பாத்துகிட்டோம். 'மொத்த சண்டையும் இந்த நாயால தான் வந்தது. இவன போய் நல்லவன்னு நினைக்குறாங்க' அப்படின்னு நெனச்சிகிட்டோம்.
ரூம் போன உடனே HOD கூல் ஆகிட்டாரு. எங்களுக்கு உணர்ச்சி வர ஆரம்பிச்சது. 'சார் பாருங்க சார் ரத்தம் வர அளவுக்கு அடிச்சி இருக்காங்க' அப்படின்னு அமர் தன்னோட கைய காட்டினான். HOD ச்சு..ச்சு.. ச்சு ன்னு உச்சு கொட்டினார். உடனே ஒரு சீனியர் 'சார் இங்க பாருங்க...எனக்கும் அடி விழுந்து இருக்கு' அப்படின்னு கழுத்து கிட்ட காமிச்சான். 'அங்க என்ன யா இருக்கு.. வெறும் அழுக்கு தான் இருக்கு' அப்படினு சொல்லிட்டாரு HOD.
அப்படி இப்படி பேசி எல்லாரும் வார்னிங் வாங்கிட்டு வெளிய வந்தோம். அப்போ தான் அமர் கைல ரத்தம் வந்தத அசோக் பாத்தான். 'எப்படி டா ரத்தம் வந்தது' அப்பாவியா அசோக் கேட்டான். 'டேய்...அடிச்சதே நீ தான் டா' சொன்னா அசோக் நம்பவே இல்ல. ஆனா அன்னிக்கு நடந்த விஷயத்துல highlight கார்த்தி குடுத்த explanation thaan. 'மச்சா...சண்ட எப்போடா நடந்தது....நா தண்ணி குடிச்சிட்டு இருந்தேன் டா....அதனால கவனிக்கல'
முற்றும்