ரொம்ப ரொம்ப நாள் ஆச்சு உங்கள எல்லாம் பாத்து... Typing in tamil is latest trend in blogging. So my friends who dont know tamil, pls forgive.
எனக்கு இந்த உலகத்துக்கு சொல்றதுக்கு ஒண்ணும் இல்ல அப்டின்னு நெனச்சிக்கிட்டு இருந்துட்டேன். (கல்யாணம் ஆய்டுச்சு இல்ல...அப்படி தான் தோணும்).
ஒரு வழியா திரும்பி Dallas வந்துட்டேன். லைப் ரொம்ப busya போய்கிட்டு இருக்கு. கடைசில என்னையும் வேலை பாக்க வெச்சிடாங்க. இந்த Blog ஆரம்பிக்கும் போது I am not a technical person. So there will be nothing related to technology in this blog அப்படின்னு சொல்லி இருந்தேன். ஆனா இப்போ மூட்டை மூட்டையா வெச்சி இருக்கேன் மேட்டர். அதெல்லாம் சொல்லி bore அடிக்க மாட்டேன் பயபடாதீங்க.
Infy manager கூட cubicle share பண்ணி இருக்கேன். நமக்கு தான் PM, SPM அப்படின்னு பாகுபாடே கெடயாதே. அதான். Client manager பக்கத்துக்கு cubicle. அதான் கொஞ்சம் terrora இருக்கும். சமீப காலமா நான் alarm வைக்கறதே இல்ல. Sharpa 7.40 ku call பண்ணி எழுப்பி விட்டுடுவாரு. 'Jeevan it is not working for me man. I am gonna join a call in five minutes. Fix it before that and call me' அப்படின்னு மனசாட்சியே இல்லாம சொல்லிடுவாரு.
அஞ்சு நிமிஷம் கழிச்சி அவருக்கு கால் பண்ணி......"அய்யா.....உங்களுக்கு மட்டுமா வொர்க் ஆகல....எனக்கும் தான் வொர்க் ஆகல....ஏன்....இந்த ஊர்ல எவனுக்குமே வொர்க் ஆகல...." அப்படின்னு சொன்னதுக்கு அப்புறம் தான் client manager மனம் கொஞ்சம் தளர்ச்சி அடையாம இருக்கும். அப்பறம் அடிச்சி பிடிச்சி நம்ம வேலைய செஞ்சி முடிக்கணும். Tough but interesting.
Client manager's manager is Client director. அவர் Microsoft ல 10 வருஷம் குப்பை கொட்டி இருக்காராம். நமக்கு ஒரு விஷயம் தெரியலனா அவருக்கு குதுர்கலம் ஆய்டும். உடனே 1000 technical words சொல்லுவாரு. google link அனுப்புவாரு. போர்ட்ல if loop...for loop எல்லாம் போட்டு code எழுதி அத அவரோட Blackberry ல போட்டோ எடுத்து மெயில் அனுப்புவாரு. திடீர்னு laptop எடுத்துகிட்டு என்னோட cubicle வந்து 'இங்க பாரு...நா ஒரு sample solution பண்ணி இருக்கேன் அப்படின்னு காட்டுவாரு. எல்லாம தெரிஞ்ச ஏகாம்பரம் நம்ம கூட இருக்கறது நல்ல விஷயம் தான். ஆனா அதுல நிறைய பிரச்சனையும் இருக்கு.
"நம்மளோட tool la இந்த லாஜிக் நடக்கும் போது அந்த லாஜிக் கால் ஆகி asynchronous a இன்னொரு code execute பண்ணி லெப்ட்ல பூந்து ரய்ட்ல வந்து U turn போடணும்" அப்படின்னு கொழப்பமா ஒரு requirement குடுப்பாரு. நானும் என் Infy PMum ஒண்ணும் புரியாம லெப்ட்ல பூந்து ரய்ட்ல வந்து cubicle ஓடி வந்துடுவோம். இந்த requirements எல்லாம் என் நண்பர்கள் கிட்ட சொன்னா கௌண்டமணி மாதிரி "இந்த மாதிரி எல்லாம் யோசிக்க சொல்லி உனக்கு யாருடா சொல்லி தரா".. அப்படின்னு கேக்கறாங்க. நா காலைல கடவுள் கிட்ட வேண்டிகறது இது தான். 'கடவுளே....இவன புரிஞ்சுக்க எனக்கு தனி மூளை குடு' அப்படின்னு தான்.
எதோ......தினமும் எதாவது கத்துக்கிட்டு இருக்கேன். வாழ்க்கை போய்கிட்டு இருக்கு.
மிச்சம் அப்புறம் சொல்றேன். See ya.
-- Dear! Jap Evans